இந்தியா

ஸ்கேட்டிங் பயிற்சியாளர் சாவு போலீசார் விசாரணை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஸ்கேட்டிங் பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரெட்டியார்பாளையம் புது நகர் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் அஜிஸ் ராஜவர்மன், 28; திருமணமாகாதவர். இவர் கடந்த 6 ஆண்டு களாக கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.அங்கு கடந்த 5ம் தேதி ஸ்கேட்டிங் பயிற்சி செய்தபோது தடுமாறி

புதுச்சேரி : ஸ்கேட்டிங் பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் புது நகர் 6வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மகன் அஜிஸ் ராஜவர்மன், 28; திருமணமாகாதவர். இவர் கடந்த 6 ஆண்டு களாக கோவையில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்கேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.அங்கு கடந்த 5ம் தேதி ஸ்கேட்டிங் பயிற்சி செய்தபோது தடுமாறி விழுந்தார்.

இதில் அவருக்கு கை, இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், புதுச்சேரியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.நேற்று காலை 6.௦௦ மணியளவில் அவரது தாயார் எழுப்பியபோது சுய நினைவின்றி இருந்தார். அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X