இந்தியா

சன்டே மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்; கொரோனா தொற்று பரவும் அபாயம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சன்டே மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் அலைமோதியது.புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தொற்று பரவல், இன்றும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலை முடிந்து, தற்போது 3வது அலையை நோக்கி, புதுச்சேரி நகர்ந்து கொண்டுள்ளது.முதல் அலையை விட, 2வது அலையில் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர். மே மாதத்தில் மட்டும் 750க்கும்
 சன்டே மார்க்கெட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்;  கொரோனா தொற்று பரவும் அபாயம்

புதுச்சேரி : புதுச்சேரி சன்டே மார்க்கெட்டில், மக்கள் கூட்டம் அலைமோதியது.புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கிய கொரோனா தொற்று பரவல், இன்றும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. முதல் அலை, இரண்டாவது அலை முடிந்து, தற்போது 3வது அலையை நோக்கி, புதுச்சேரி நகர்ந்து கொண்டுள்ளது.

முதல் அலையை விட, 2வது அலையில் மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தனர். மே மாதத்தில் மட்டும் 750க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். 48 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் அலைந்தனர்.கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளதால், மக்களின் வாழ்வாதாரம் கருதி, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஆனால், கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள், மற்றும் பொருளாதார பாதிப்புகளை மக்கள் மறந்து விட்டனர். முக கவசம் அணியாமல், பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றனர்.நேற்று சன்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. எள் கொட்டினால், எண்ணெய் ஆகிவிடும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது. சிறு குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர்.

இதில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் முக கவசம் அணியவில்லை.இதே நிலை நீடித்தால், புதுச்சேரியில் விரைவில் கொரோனா 3வது அலை துவங்கி விடும் என்பதில் சந்தேகம் இல்லை.கூட்டம் கூடுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X