இந்தியா

மாணவர்களுக்கு சென்டாக் விண்ணப்பம் இலவசம்! அரசு பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி, ஆக. 9-கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு சென்டாக் விண்ணப்பங்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, இன்ஜினியரிங்,கலை - அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் ஆன்-லைனில் வழங்கப்பட உள்ளது.இதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படுகிறது.புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை -
 மாணவர்களுக்கு சென்டாக் விண்ணப்பம் இலவசம்! அரசு பள்ளிகளில் விண்ணப்பிக்க ஏற்பாடு

புதுச்சேரி, ஆக. 9-கொரோனா பரவலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு சென்டாக் விண்ணப்பங்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, இன்ஜினியரிங்,கலை - அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் ஆன்-லைனில் வழங்கப்பட உள்ளது.இதற்கான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை - அறிவியல் கல்லுாரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, 'சென்டாக்' மூலம் நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பம் வினியோகம், கவுன்சிலிங் நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெறுகிறது.

இந்தாண்டிற்கான கவுன்சிலிங் ஏற்பாடுகளை, சென்டாக் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. முதல்கட்டமாக, இன்ஜினியரிங், கலை - அறிவியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மட்டும் ஆன்-லைனில் வழங்க திட்டமிட்டுள்ளது. இலவச விண்ணப்பம்வழக்கமாக, சென்டாக் விண்ணப்பத்திற்கு, ஒரு முறை பதிவுக் கட்டணம் பெறப்படும்.

கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் கடந்த காங்., ஆட்சியில், புதுச்சேரி மாணவர்களுக்கு மட்டும் பதிவுக்கட்டணம் இன்றி, விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.தற்போது, கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாணவர்களுக்கு இந்தாண்டும் சென்டாக் விண்ணப்பங்களை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பு, இந்த வாரம் வெளியாகிறது. இலவச விண்ணப்பம் வழங்குவதன் மூலம், சென்டாக் நிர்வாகத்திற்கு 75 லட்சம் ரூபாய் வரை நிதி இழப்பு ஏற்படும்.பிற மாநில மாணவர்கள்அதே வேளையில், பிற மாநில மாணவர்களுக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இன்ஜினியரிங் படிப்பிற்கு பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள்- 250 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.கலை -அறிவியல் படிப்பிற்கு பிற மாநில பொதுப்பிரிவு மாணவர்கள் 300 ரூபாய், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 150 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த நேரும்.


எவ்வளவு சீட்டுகள்


அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் 4,000 பி.டெக்., இடங்கள், கலை - அறிவியல் கல்லுாரிகளில் 4,260 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளன.அரசு பள்ளி மாணவர்கள் அலைச்சல் இல்லாமல் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி, சென்டாக் மூலம் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை, சாதி, கல்விச் சான்றிதழ்களுடன், அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி விண்ணப்பிக்கலாம்.புதிய படிப்புகள்இந்தாண்டு, ஏனாம் அரசு பொறியியல் கல்லுாரியில் முதல் முறையாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.இக்கல்லுாரியில், காலத்திற்கேற்ப 3டி அனிமேஷன், ரோபோடிக்ஸ், டிஜிட்டல் டெக்னாலஜி ஆகிய மூன்று பி.டெக்., படிப்புகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X