அரசியல் செய்தி

தமிழ்நாடு

14ம் தேதி நள்ளிரவு மேல்சபை அறிவிப்பு?

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (77)
Share
Advertisement
நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி, வரும் 14ம் தேதி நள்ளிரவில், சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடுமானால், அதில் மேல்சபைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் 13ம் தேதி துவங்குகிறது. கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை, அலுவல் ஆய்வுக்குழு நாளை கூடி முடிவு செய்கிறது. அந்தக் கூட்டத்தில், நாட்டின் 75வது

நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி, வரும் 14ம் தேதி நள்ளிரவில், சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடுமானால், அதில் மேல்சபைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news



தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் 13ம் தேதி துவங்குகிறது. கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை, அலுவல் ஆய்வுக்குழு நாளை கூடி முடிவு செய்கிறது. அந்தக் கூட்டத்தில், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஆகஸ்ட் 15ம் தேதி காலை, சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்தலாமா? அல்லது 14ம் தேதி நள்ளிரவு சிறப்புக்கூட்டம் நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.


latest tamil news



நள்ளிரவில் சிறப்புக் கூட்டம் நடத்த முடிவானால், அதில், சுதந்திரம் கிடைக்க போராடிய தலைவர்களை வாழ்த்தி உறுப்பினர்கள் பேசுவர். பின், பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்படலாம். சிறப்புக் கூட்டத்தில், மேல்சபையை கொண்டு வருவதற்குரிய தீர்மானம் நிறைவேற்றும் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-ஆக-202106:06:55 IST Report Abuse
meenakshisundaram ஆஹா அன்னிக்குத்தான் இவரு 'நாட்டை மீட்போம்னு 'சொன்னதை செய்வாரா?
Rate this:
Cancel
10-ஆக-202100:54:31 IST Report Abuse
Vittal anand rao. மேல் சபை அமைக்க கீழ் சபையIல் 66.67 சதம் உறுப்பினர்கள் ஒப்புதல் பெரவேண்டும்
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
09-ஆக-202122:18:52 IST Report Abuse
venkates கடன் சுமையில் மேல் சபை தேவையான?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X