இந்தியா

தேர்தல் தோல்வியால் காங்., முடங்கி விடாது; முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''காங்., கட்சி பீனிக்ஸ் பறவை போல், மீண்டெழுந்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்'' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.அரியாங்குப்பம் பகுதி அ.தி.மு.க.,வினர், காங்., கட்சியில் இணையும் விழா, காங்., அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில்,

புதுச்சேரி : ''காங்., கட்சி பீனிக்ஸ் பறவை போல், மீண்டெழுந்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்'' என, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.

அரியாங்குப்பம் பகுதி அ.தி.மு.க.,வினர், காங்., கட்சியில் இணையும் விழா, காங்., அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது.மாநில காங்., தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;

காங்., கட்சி நீண்ட வரலாறு கொண்டது. தேர்த லில் தோல்வி பெற்றால் முடங்கிப் போகாது. பீனிக்ஸ் பறவை போன்று, காங்., கட்சிக்கு அழிவே கிடையாது. வலிமையுடன் மீண்டு எழும். மத்தியிலும், மாநிலத்திலும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.முதியோர் பென்ஷன் உயர்வுக்கு, காங்., ஆட்சியில் கவர்னர் ஒப்புதல் தரவில்லை.

தற்போதைய கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார். காங்., ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை, தற்போதைய ஆட்சி நிறைவேற்றி, பெயர் வாங்க முயற்சிக்கிறது.என்.ஆர்.காங்., - பா.ஜ., இடையே பிரச்னைகள் தொடர்கிறது. பள்ளி திறக்கப்படும் என முதல்வரும், திறக்கப்படாது என கல்வி அமைச்சரும் கூறுகின்றனர். அவர்களுக்குள் ஒருமித்த முடிவு எடுக்க முடியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X