பொது செய்தி

தமிழ்நாடு

ஆயிக்குப்பம் ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர். ஆயிக்குப்பம், நீராழி, எடங்கொண்டான்பட்டு, தோப்புக்கொல்லை, புதுப்பேட்டை பகுதிகளில் 649 குடும்பங்களில், 3112 பேர் வசிக்கின்றனர். இதில், 18 வயது நிரம்பியோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயிக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

ஆயிக்குப்பம், நீராழி, எடங்கொண்டான்பட்டு, தோப்புக்கொல்லை, புதுப்பேட்டை பகுதிகளில் 649 குடும்பங்களில், 3112 பேர் வசிக்கின்றனர். இதில், 18 வயது நிரம்பியோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. நுாலக கட்டடம் உள்ளிட்ட ஊராட்சி பொது இடங்களிலும், வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஊராட்சியில், 2334 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், மருத்துவ குழுவினர், ஊராட்சி நிர்வாகத்தை நம்பி அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்டோர், 1324 பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர், 1010 பேரும், இரண்டாவது 'டோஸ்', 170 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

தற்போது ஊராட்சி, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார். இதற்கான விருது குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X