சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கஞ்சா செடி வளர்த்தவர் கைதுவிருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனி பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். கார்குடல் காலனியைச் சேர்ந்த செந்தில் மகன் ஆகாஷ், 25; வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து,

கஞ்சா செடி வளர்த்தவர் கைது

விருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனி பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக விருத்தாசலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். கார்குடல் காலனியைச் சேர்ந்த செந்தில் மகன் ஆகாஷ், 25; வீட்டில் கஞ்சா செடி வளர்த்தது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, ஆகா ைஷ கைது செய்து, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா செடியை அழித்தனர்.

பைக் திருட்டு


விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 25; இவர் கடந்த 1ம் தேதி, தனது பைக்கை, வீட்டு வாசலில் நிறுத்திச் சென்றார். காலை எழுந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிந்தது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பைக்கை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்கு


விருத்தாசலம் அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மனைவி ராதா, 48; கொளஞ்சிநாதன் மனைவி மல்லிகா, இருவருக்கும் பொது இடத்தில் மாடு கட்டுவது தொடர்பாக நேற்று முன்தினம் பிரச்னை ஏற்பட்டது. இதில், மல்லிகா, கணவர் ஆறுமுகம், மகன் சக்திவேல், மருமகள் பொன்னம்மா, சுந்தரி, ஆகியோர் ராதாவை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மல்லிகா, ஆறுமுகம் உள்ளிட்ட ஐவர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மணல் கடத்தியவர் கைது


புவனகிரி தாலுகா, மருதுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று காலை 9.00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்ராயன்தெத்து வெள்ளாற்றில் பைக்கில் சிமென்ட் சாக்கில் மணல் திருட்டில் ஈடுபட்ட வத்ராயன்தெத்து பெரியகுளத்தெரு ஆனந்தபாபு,35; என்பரை கைது செய்து, பைக் மற்றும் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

விஷ சாராயம் விற்றவர் கைது


விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆயியார்மடம் பகுதியில் சாராயம் விற்ற புவனகிரி அடுத்த எரும்பூரைச் சேர்ந்த பழனிச்சாமி, 51; என்பவரை கைது செய்து, 5 லிட்டர் விஷ சாராயம் மற்றும் 10 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பைக் திருட்டு


மந்தாரக்குப்பம் என்.எஸ்.கே., நாடார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர், 31; இவர் கடைவீதியில் வியாபாரம் செய்கிறார். கடந்த வாரம் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக் காணமால் போனது. புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய நபர் குறித்து விசாரிக்கின்றனர்.

தகராறில் 5 பேர் மீது வழக்கு


நடுவீரப்பட்டு அடுத்த சாத்தமாம்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி முத்தம்மாள்,50; அதே பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி,65; இவரது மகன் சசிக்குமார் கடந்த ஆண்டு ராமலிங்கம் தம்பி பஞ்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வந்துள்ளார். நேற்று மாசிலாமணி சாலையில் நின்று ராமலிங்கம் குடும்பத்தினரை திட்டினார். இதனால் முத்தம்மாள், மாசிலாமணி குடும்பத்தினரிடையே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த முத்தம்மாள், அவரது மகன் ரகுபாலன், பஞ்சன் மகன்கள் விஜய், சஞ்சய், மாசிலாமணி, மனைவி அரசாயி ஆகியோர் கடலுார் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். புகார்களின் பேரில் மாசிலாமணி,65; அரசாயி,55; விஜய், 21; ரகுபாலன்,26; சஞ்சய்,19 ஆகியோர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X