பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி; நடுவீரப்பட்டு ஊராட்சிக்கு பாராட்டு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஊராட்சியில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக கலெக்டர் பரிசு வழங்கினார்.தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கொண்டாட உத்தரவிட்டதையடுத்து ஊராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி 100

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஊராட்சியில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக கலெக்டர் பரிசு வழங்கினார்.

தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 7 ம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கொண்டாட உத்தரவிட்டதையடுத்து ஊராட்சிகளில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்திய ஊராட்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி, 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியான நடுவீரப்பட்டு ஊராட்சிக்கு பரிசு வழங்கினார்.

ஊராட்சித் தலைவர் சந்தோஷம் ஆறுமுகம் பெற்றுக் கொண்டார்.திட்ட இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் , சுகாதாரபணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, துணை இயக்குனர் செந்தில்குமார், மகளிர் திட்ட அலுவலர் செந்தில்வடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X