ஆடி அமாவாசையொட்டி தர்ப்பணம் தரத் தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசையொட்டி தர்ப்பணம் தரத் தடை

Added : ஆக 09, 2021
Share
கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் ஆடி அமாவாசையொட்டி தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆடி அமாவாசையில் கோவில் குளங்கள் மற்றும் அருகில் உள்ள நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் முடிந்ததும் கோவில்கள் வழிபாடு நடக்கும். கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் லேசாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் ஆடி

கடலுார் : கடலுார் சில்வர் பீச்சில் ஆடி அமாவாசையொட்டி தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆடி அமாவாசையில் கோவில் குளங்கள் மற்றும் அருகில் உள்ள நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தர்ப்பணம் முடிந்ததும் கோவில்கள் வழிபாடு நடக்கும். கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் லேசாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் ஆடி அமாவாசையான நேற்று பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில்கள் திறக்கப்படாது என அரசு அறிவித்தது.

கடலுார் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,646 கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கவில்லை. கடலுார் சில்வர் பீச் உட்பட அனைத்து நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்களுக்கு போலீசர் அனுமதி மறுத்தனர். போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க சென்றவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தர்ப்பணம் கொடுத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X