பொது செய்தி

தமிழ்நாடு

திட்டக்குடி அரசு பள்ளியில் அமைச்சர், கலெக்டர் நேரில் ஆய்வு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திட்டக்குடி : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியை சீரமைப்பது குறித்து அமைச்சர் கணேசன் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டனர். பள்ளியில் கட்டடங்கள், சுற்றுச்சுவர் சேதமடைந்தும், விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி உள்ளதையும் சீரமைக்கக் கோரி

திட்டக்குடி : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியை சீரமைப்பது குறித்து அமைச்சர் கணேசன் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நுாற்றாண்டு விழா கொண்டாட முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டனர். பள்ளியில் கட்டடங்கள், சுற்றுச்சுவர் சேதமடைந்தும், விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி உள்ளதையும் சீரமைக்கக் கோரி இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் திரைப்பட இயக்குனர் கவுதமன், அமைச்சர் மெய்யநாதனிடம் மனு அளித்தார்.

இதையடுத்து நேற்று தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆகியோர் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பழுதடைந்த கட்டடங்களை இடித்து அகற்றி, பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைக்கவும், விளையாட்டு மைதானம், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவும், வாட்ச்மேன் நியமிக்கவும் திட்டமிடப்பட்டது. சப்கலெக்டர் அமித்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், தி.மு.க.,ஒன்றிய செயலர் அமிர்தலிங்கம், நகர செயலர் பரமகுரு உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X