மீனவர்கள் பிரச்னையை தீர்க்க அமைதிக்குழு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் பிரச்னையை தீர்க்க அமைதிக்குழு

Added : ஆக 09, 2021
Share
கடலுார் : கடலுார் மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்னையை தீர்க்க அமைதிக்குழு அமைக்கப்படும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறினார்.கடலுார், தேவனாம்பட்டிணம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களிடையே நிலவும் தொழில் ரீதியான பிரச்னையை தீர்க்க கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். எஸ்.பி., சக்தி கணேசன், கூடுதல் கலெக்டர்

கடலுார் : கடலுார் மீனவர்களின் தொழில் ரீதியான பிரச்னையை தீர்க்க அமைதிக்குழு அமைக்கப்படும் என கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறினார்.

கடலுார், தேவனாம்பட்டிணம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களிடையே நிலவும் தொழில் ரீதியான பிரச்னையை தீர்க்க கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். எஸ்.பி., சக்தி கணேசன், கூடுதல் கலெக்டர் ரஞ்ஜீத் சிங், ஆர்.டி.ஓ., அதியமான் கவியரசு, மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

கலெக்டர், இரு தரப்பு மீனவ கிராம முக்கியதஸ்கர்ளை தனித்தனியாகவும், பின்னர் ஒன்றாகவும் அழைத்து பேசினார். பின், கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறுகையில், 'கடலுார் தேவனாம்பட்டிணம் மற்றும் சோனங்குப்பம் மீனவர்களிடையே மீன்கள் விற்கும் போது பிரச்னை ஏற்படுகிறது. அமைதியான சூழலை உருவாக்க வருவாய்த் துறை, காவல் துறை, மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள் அடங்கிய அமைதிக்குழு விரைவில் அமைக்கப்படும். தொழில் ரீதியான பிரச்னைகளை இக்குழுவில் பேசி தீர்த்துக் கொள்ளலாம். சுருக்குவலை பிரச்னை பற்றி பேசவில்லை' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X