பொது செய்தி

இந்தியா

பெங்களூரு விதான் சவுதாவில் இன்று பூஜை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பெங்களூரு: இரண்டு வாரங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பெங்களூரு விதான் சவுதா, விகாஸ் சவுதா வளாகங்கள் இன்று முதல் களை கட்டும். பல அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு, இன்று பூஜை நடக்கவுள்ளது.முதல்வர் எடியூரப்பா, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நாளிலிருந்து, அமைச்சர்கள், அலுவலகங்களுக்கு வருவதையே நிறுத்தி விட்டனர். ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், தங்களின் தொகுதி

பெங்களூரு: இரண்டு வாரங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பெங்களூரு விதான் சவுதா, விகாஸ் சவுதா வளாகங்கள் இன்று முதல் களை கட்டும். பல அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு, இன்று பூஜை நடக்கவுள்ளது.
முதல்வர் எடியூரப்பா, தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த நாளிலிருந்து, அமைச்சர்கள், அலுவலகங்களுக்கு வருவதையே நிறுத்தி விட்டனர். ஒன்றிரண்டு எம்.எல்.ஏ.,க்கள் மட்டும், தங்களின் தொகுதி அபிவிருத்தி பணிகள் தொடர்பாக, அதிகாரிகளை வலம் வந்தனர்.எப்போதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் நடமாட்டத்தால், பரபரப்பாக காணப்பட்ட விதான் சவுதா, விகாஸ் சவுதா தற்போது வெறிச்சோடியுள்ளது.
புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை, பதவியேற்ற நாளன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பெயரளவுக்கு பங்கேற்றனர். அலுவலகம் ஒதுக்கப்பட்ட பின், அமைச்சர் நாராயணா கவுடா மட்டும், தன் அலுவலகத்துக்கு பூஜை செய்தார். மற்ற யாரும் அலுவலகங்களுக்கு, தலை காண்பிக்கவில்லை.
தற்போது அமைச்சர்களுக்கு, துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று பல அமைச்சர்கள் பூஜை ஏற்பாடு செய்துள்ளனர்.பூஜை முடிந்த பின், அதிகாரிகளுடன் நடத்தி, தங்களின் துறை பணிகளை துவங்கவுள்ளனர். எனவே, விதான்சவுதா, விகாஸ்சவுதாவுக்கு இன்று முதல், களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X