பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கொடியேற்று விழாகள்ளக்குறிச்சி: வட்டார தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த 38வது இயக்க நாள் கொடியேற்று விழாவிற்கு, வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரஹீம், மாவட்ட செயலாளர் கலாநிதி, பொருளாளர் சுதா முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் மணிமேகலை கொடியேற்றி

கொடியேற்று விழா

கள்ளக்குறிச்சி: வட்டார தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடந்த 38வது இயக்க நாள் கொடியேற்று விழாவிற்கு, வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரஹீம், மாவட்ட செயலாளர் கலாநிதி, பொருளாளர் சுதா முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் மணிமேகலை கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, பெற்றோரை இழந்த பிள்ளைகள் 50 பேருக்கு, தலா 500 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தடுப்பூசி முகாம்

திருவெண்ணெய்நல்லுார்: வணிகர் சங்கம் சார்பில் நடந்த கொரோனா விழிப்புணர்வு தடுப்பூசி முகாமிற்கு, சங்கத் தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். தாசில்தார் ஆனந்தன், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என அறிவுறுத்தினார். முகாமில் கபசுர குடிநீர் மற்றும் அரிசி கம்யூனிட்டிஸ் சார்பில் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் பழனி, இளநிலை உதவியாளர் பாலமுருகன், டாக்டர் அகிலன், சங்க செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரவைக் கூட்டம்

விழுப்புரம்: ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பேரவைக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் அருணகிரி வரவேற்றார்.மாநில இணைச் செயலாளர் பிச்சையப்பா சிறப்புரையாற்றினார். நத்தர்ஷா, துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், கண்டாச்சிபுரம் பழனிவேல் ஐ.டி.ஐ., தாளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஓய்வு பெற்றோருக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் குறிப்பிட்டுள்ள நிலுவை கோரிக்கைகளை வரும் சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொரோனா விழிப்புணர்வு

விக்கிரவாண்டி: அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, டீன் குந்தவி தேவி தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் புகழேந்தி, ஆர்.எம்.ஓ., சாந்தி முன்னிலை வகித்தனர். சமூக மற்றும் நோய் தடுப்பு துறை தலைவர் சீனிவாசன் கொரோனா தடுப்பு முறை குறித்து விழிப்புணர்வு விளக்கம் அளித்தார். முன்னதாக துறை தலைவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் கொரோனா நோய் தடுப்பு உறுதிமொழியேற்றனர்.

அஞ்சலி கூட்டம்

திண்டிவனம்: நகர காய் கனி வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜாமுகமது, 61; இறந்ததற்கான நினைவு அஞ்சலி கூட்டம், சஞ்சீவிராயன்பேட்டையில் நடந்தது. காய் கனி வியாபாரிகள் சங்க தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.கூட்டத்தில், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், சுந்தரம், பாத்திர வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்பாண்டியன் ரமேஷ், முன்னாள் தலைவர் புலிமணி, சங்க செயலாளர் இளங்கோ, பூங்காவனம், பூ வியாபாரிகள் சங்கம் சேகர், முன்னாள் கவுன்சிலர்கள் ஜாகீர்உசேன், சவுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தாய்பால் வார விழா

திண்டிவனம்: அரசு மருத்துவமனையில் மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, தலைமை மருத்துவர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். கண் மருத்துவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், அருள்குமரன், வட்டார தலைவர் பாபு முன்னிலையில், அரசு மருத்துவமனையில் 70 தாய்மார்களுக்கு பிஸ்கெட், பிரட், பழங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் குழந்தைகள் நல மருத்துவர்கள் பாலமுருகன், புருஷோத்தமன், சங்கத்தின் சாசன தலைவர் பாலாஜி, வெங்கடேசன், சிவக்குமார், ஆசிரியர் பிரான்சிஸ் கோதை பாலாஜி, முன்னாள் தலைவர் சுரேஷ், வாசவி பிரபாகரன், தர்மசிவம், பாஸ்கர், முருகன், பாபாசங்கர், மணிகண்டன், விஜய், தினேஷ்குமார் பங்கேற்றனர்.

சாகுபடி பயிற்சி முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில் ஆத்மா திட்டத்தின் மூலம் நடந்த பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி பயிற்சி முகாமில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குனர் சாமுவேல் பாரம்பரிய நெல்லை வியாபாரம் செய்வது மற்றும் சான்று பெறுவது குறித்து பேசினார்.வேளாண்மை அலுவலர் நடராஜன் பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதனை இயற்கை முறையில் சாகுபடி செய்வது குறித்து எடுத்துரைத்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர் சக்திவேல் ஆத்மா திட்டம் குறித்து விளக்கமளித்தார். விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு பிரசாரம்

அவலுார்பேட்டை: வளத்தியில் சுகாதாரத் துறை சார்பில் நடந்த கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்திற்கு, மேல்மலையனுார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கி, கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் சத்துமாத்திரைகள் வழங்கப்பட்டது.டாக்டர்கள் லக்ஷனா பிரியதர்ஷினி, பவித்ரா, செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

மரக்காணம்: வருவாய்த்துறை சார்பில் மரக்காணம் தாலுகா அலுவலகம் முன் நடந்த கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எமன், கொரோனா, மருத்துவர் உள்ளிட்ட வேடங்களை அணிந்து கொரோனா எப்படி பொது மக்களை தாக்குகிறது.அதனைத் தடுக்கும் முறைகள் குறித்து நாடகம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தாசில்தார் உஷா, தலைமையிடத்து துணை தாசில்தார் ஏழுமலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், சிவகாமி, செயல் அலுவலர் மயில்வாகனன் உட்பட பலர் பங்கேற்றனர்.'''

சாகை வார்த்தல் விழா

திருவெண்ணெய்நல்லுார்: துலக்கம்பட்டு அங்காளம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழாவையொட்டி, நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து மதியம் 12:00 மணியளவில் கரகம் எடுத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் கூழ் குடம் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஏராளமான பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

பேரவைக் கூட்டம்

திண்டிவனம்; தமிழ்நாடு சின்னம்மா பேரவை அறிமுகக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளர் பாலா தலைமை தாங்கினார். கூட்டத்தில், பேரவையின் மாநிலத் தலைவர் சீனிவாசன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் 18ம் தேதி சசிகலாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி

மூங்கில்துறைப்பட்டு: புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த, யானைக்கால் நோய் தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். யானைக்கால் நோய் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கால்களை சுத்தப்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.நோயாளிகளுக்கு கால்களை சோப்பு போட்டு கழுவி துடைத்து சுத்தமாக பராமரிக்கும் முறை குறித்து மருத்துவர் எடுத்துரைத்தார். வட்டார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர் வள்ளி, கிராம சுகாதார செவிலியர் மெர்லின், தேன்மொழி மருந்தாளுனர் பரந்தாமன் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு வார நிறைவு விழா

கள்ளக்குறிச்சி: கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வார விழா நிறைவு நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், கொரோனா வைரஸ், எம தர்மன் உள்ளிட்ட மாறு வேடம் அணிந்தவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கமிஷனர் குமரன் தலைமை தாங்கினார். பொறியாளர் பாரதி, வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, மருத்துவ அலுவலர்கள் பங்கஜம், பிரபாவதி, துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, விக்னேஸ்வரன், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆடி அமாவாசை விழா

விழுப்புரம்: சித்தேரிக்கரை அய்யனார் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை விழாவையொட்டி, நேற்று காலை 7.00 மணிக்கு அய்யனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கையொட்டி இங்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, பெண்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டு சென்றனர்.

விழிப்புணர்வு வாசகம் போட்டி

திண்டிவனம்: நகராட்சி கமிஷனர் சவுந்தர்ராஜன் மேற்பார்வையில் நகராட்சி அலுவலக வளாகத்தில், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டி நடந்தது.இதேபோல், தாலுகா அலுவலகம், மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதுவதற்காக பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X