இளம்பெண்ணை அடித்தவர் கைது

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பசவனகுடி: பெங்களூரு அருகே இளம் பெண்ணை பலர் முன்னிலையில் கன்னத்தில் அடித்து, அவமதித்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரு பசவனகுடியில், 'டாமினோஸ் பீட்சா' என்ற கடை உள்ளது. இக்கடையில் புருஷோத்தம், 30, என்பவர் மேலாளராக பணியாற்றுகிறார். இதே கடையில் பணியாற்றும் இளம்பெண்ணை ஒரு தலையாக அவர் காதலித்துள்ளார். தன் காதலை ஏற்கும்படி, பலவந்தப்படுத்தியுள்ளார். வேறொருவரை

பசவனகுடி: பெங்களூரு அருகே இளம் பெண்ணை பலர் முன்னிலையில் கன்னத்தில் அடித்து, அவமதித்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு பசவனகுடியில், 'டாமினோஸ் பீட்சா' என்ற கடை உள்ளது. இக்கடையில் புருஷோத்தம், 30, என்பவர் மேலாளராக பணியாற்றுகிறார். இதே கடையில் பணியாற்றும் இளம்பெண்ணை ஒரு தலையாக அவர் காதலித்துள்ளார். தன் காதலை ஏற்கும்படி, பலவந்தப்படுத்தியுள்ளார்.
வேறொருவரை அப்பெண் காதலித்ததால், புருஷோத்தம் காதலை ஏற்க மறுத்தார். இதனால் கோபமடைந்த புருஷோத்தம், தேவையின்றி பணியில் தவறு கண்டுபிடித்து, இளம் பெண்ணை திட்டி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். ஒருநாள் அனைவர் முன்னிலையில், கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.அறையை தாங்க முடியாமல், அப்பெண் கீழே விழுந்தார்.
இக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து, பசவனகுடி போலீஸ் நிலையத்தில், பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தார். அதன்பேரில், புருஷோத்தம் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X