திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு காங்., தலைவர் நேரில் அஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் ராமமூர்த்தி மறைவு காங்., தலைவர் நேரில் அஞ்சலி

Added : ஆக 09, 2021
Share
திண்டிவனம் : திண்டிவனத்தில் காங்., முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு காங்., தலைவர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.தமிழக காங்., முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, 87; நேற்று காலை சென்னையில் காலமானார். அங்கு அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் உடல், அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் காங்., முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தியின் உடலுக்கு காங்., தலைவர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்., முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, 87; நேற்று காலை சென்னையில் காலமானார். அங்கு அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் உடல், அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவேரிபாக்கத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று பிற்பகல் கொண்டு வரப்பட்டு, பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு, காங்., தலைவர் அழகிரி, அமைச்சர் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், முன்னாள் எம்.பி., வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட காங்., நிர்வாகிகள் ரமேஷ், குலாம்மொய்தீன், வினாயகம், கருணாகரன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.அவரது உடல் இன்று 9ம் தேதி பிற்பகல் 1:00 மணியளவில், அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு நகராட்சி தகன மையத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்று தகனம் செய்யப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X