தமிழ்நாடு

வாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணை சேதம்! தரமாக கட்ட விவசாயிகள் கோரிக்கை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே விவசாய பாசனத்திற்கு நீர் தேக்குவதற்காக வாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணை விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தரமானதாக கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி, சின்னக்குப்பம் பகுதியில் உள்ள மலை மற்றும் காட்டுப்பகுதியில் பெய்யும் மழை நீர் சேந்தமங்கலம் வழியாக

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே விவசாய பாசனத்திற்கு நீர் தேக்குவதற்காக வாய்க்காலில் கட்டப்பட்ட தடுப்பணை விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தரமானதாக கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி, சின்னக்குப்பம் பகுதியில் உள்ள மலை மற்றும் காட்டுப்பகுதியில் பெய்யும் மழை நீர் சேந்தமங்கலம் வழியாக கெடிலம் ஆற்றில் கலக்கிறது.மழைநீர் செல்லும் நீர் வழிப்பாதை பகுதியான செங்குறிச்சி, சின்னக்குப்பம், பாதுார், சேந்தமங்கலம் பகுதிகளில் ஏரிகள் இல்லை. இதனால் மலை மற்றும் காட்டுப் பகுதியிலிருந்து செல்லும் மழைநீர் விவசாயத்துக்கு பயன்பாடின்றி வீணாக ஆற்றில் கலக்கிறது.

இதனால், விவசாயிகள் கிணற்று நீரைக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். பாசனத்திற்கு தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கவும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் ஏரிகள் இல்லாததால் விவசாய பயன்பாட்டிற்கு போதியளவில் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மலை மற்றும் காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் மழை நீரைத் தேக்கி வைத்து விவசாய பயன்பாட்டுக்கு பயன்படும் வகையில் சேந்தமங்கலத்தில் நீர்வழி வாய்க்காலில் தடுப்பணை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அதன்பேரில் 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சேந்தமங்கலத்தில் உள்ள வாய்க்காலில் 20 மீட்டர் நீளத்திற்கு 11 மீட்டர் அகலம் கொண்ட வாய்க்காலில் 4 அடி உயரம் கொண்ட தடுப்பணை கடந்த 3 மாதங்களுக்கு முன் கட்டினர்.அப்போது, அப்பகுதி விவசாயிகள் சிலர் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாய நிலத்திற்குச் செல்ல பாதை இல்லை. வாய்க்காலை அகலப்படுத்தி தடுப்பணைக் கட்டினால் விவசாய பொருட்களைக் கொண்டு வர வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாது என கூறினர்.மேலும் நீர்நிலை செல்லும் வழிப்பாதை கரையை வாகனங்கள், விவசாயிகள் செல்லும் வகையில் அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதுபோன்று, அகலமான கரையை கட்ட சாத்தியக்கூறுகள் என இல்லை எனக்கூறி பொதுப்பணித்துறையினர் தடுப்பணையைக் கட்டினர்.

இதனால் தடுப்பணை கட்டி முடித்த 3 மாதத்திலேயே சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதேபோன்று அப்பகுதியில் கட்டப்பட்ட மற்றொரு தடுப்பணையையும் விவசாயிகள் உடைத்து தடுப்பணை இருந்த இடமே இல்லாத அளவில் சேதப்படுத்தி உள்ளனர்.மேலும், நீர்வழிப்பாதை செல்லும் பகுதியில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படவில்லை. இதனால் நீர் வழிப்பாதை இருக்கும் இடம் தெரியாமல் மயமாகி வருகிறது.எனவே நீர்வழிப் பாதை பகுதியினை சீரமைக்கவும், தடுப்பணையை தரமானதாகவும் விவசாய பாசனத்திற்கு பயன்படும் வகையில் கட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தடுப்பணை 4 அடி உயரத்திற்கும், 11 மீட்டர் அகலத்திற்கும் கட்டியுள்ளனர். இதனால் அங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படும். ஆனால், வாய்க்கால் பகுதி உயரமும், அகலமும் குறைவாக இருப்பதால் தண்ணீர் அருகில் வயல்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும்.

மேலும், விவசாயிகள் செல்லும் வகையில் வாய்க்கால் கரை பகுதியை அகலப்படுத்த வேண்டும். கரையை அகலப்படுத்தவும், உயர்த்தவும் விவசாய நிலத்தில் மண் எடுக்கக் கூடாது என விவசாயிகள் தடுப்பதால் கரையை உயர்த்தவும் பலப்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X