சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, வீட்டுக்குள் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ஒன்பதரை சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்; இவரது மனைவி சரிதா, 37; இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினர். நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, வீட்டுக்குள் துாங்கி கொண்டிருந்த பெண்ணிடம் ஒன்பதரை சவரன் தாலிச் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவளூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்; இவரது மனைவி சரிதா, 37; இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கினர். நள்ளிரவில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அறையில் துாங்கி கொண்டிருந்த சரிதாவின் கழுத்தில் கிடந்த ஒன்பதரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

சரிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மர்மநபர்களை விரட்டிச் சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த முகுந்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X