சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் கிளை சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் சின்னபேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் ஆகாஷ் என்ற பாண்டியன், 19; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், போக்சோ வழக்கு நேற்று

சிதம்பரம் : சிதம்பரம் கிளை சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் சின்னபேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் மகன் ஆகாஷ் என்ற பாண்டியன், 19; போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிதம்பரம் கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், போக்சோ வழக்கு நேற்று முன்தினம் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இதையறிந்த, ஆகாஷ் என்ற பாண்டியன் சிறைச்சாலையில் உள்ள கழிவறையில் தான் கட்டியிருந்த கைலியால் துாக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த காவலர்கள், அவரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X