பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு தியானப்பயிற்சி; கூடுதல் டி.ஜி.பி., ஏற்பாடு

Updated : ஆக 09, 2021 | Added : ஆக 09, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: போலீசார், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபட, 'ஜென்டென்' என பெயரிட்டு, தியான பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கீழ், 16 பட்டாலியன்கள் செயல்படுகின்றன. இவற்றில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்; இவர்களில், 90 சதவீதம் பேர் இளைஞர்கள்.இவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து

சென்னை: போலீசார், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபட, 'ஜென்டென்' என பெயரிட்டு, தியான பயிற்சி பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் கீழ், 16 பட்டாலியன்கள் செயல்படுகின்றன. இவற்றில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர்; இவர்களில், 90 சதவீதம் பேர் இளைஞர்கள்.இவர்கள் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து விடுபட 'ஜென்டென்' என்ற தியான பயிற்சி வகுப்புக்கு, கூடுதல் டி.ஜி.பி., ஜெயந்த் முரளி ஏற்பாடு செய்துள்ளார். இவரது உத்தரவின்படி, சென்னை ஆவடி உட்பட 16 பட்டாலியன்களிலும், ஒரே நேரத்தில்15 போலீசார் தியானம் செய்ய, தனி அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகள் வண்ண மயமாக உள்ளன.

இந்த அறைகளில், போலீசாருக்கு பிரம்மாகுமாரிகள் மற்றும் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் பயிற்சி அளித்து வருகின்றனர்.இது குறித்து, ஜெயந்த் முரளி கூறியதாவது:
மருந்தே உணவு; உணவே மருந்து என்பது, நம் வாழ்வியல் முறைகள். போலீசார் தங்கள் உடல் நலன் மீது அக்கறை காட்டுவது மிகவும் குறைவு. எதை சாப்பிட வேண்டும்; எதை தவிர்க்க வேண்டும் என்பதை கூட சிந்திப்பது இல்லை.


latest tamil news



இதனால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மன அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளை எதிர்கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். இதிலிருந்து அவர்களால் கட்டாயம் விடுபட முடியும். அதற்கு, இந்த தியான பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனதை ஒருநிலைப்படுத்தவும், மனித தன்மையை மேன்மைப்படுத்திக் கொள்ளவும், இந்த தியான பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
09-ஆக-202118:40:47 IST Report Abuse
Sivagiri போன மாசம் வரைக்கும் - கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தாய்ங்க -
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஆக-202117:53:25 IST Report Abuse
Girija கூடுதல் டி ஜி பி ஜாமின் பெற்றதை ஏன் இன்னும் வெளியிடவில்லை ?
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
09-ஆக-202116:48:16 IST Report Abuse
Naagarazan Ramaswamy இதைப்போல தியான பயிற்சி உ லக சமுதாய சேவா சங்கம், ஆழியாறு சார்பில் பல நிகழ்ச்சிகள் நடந்த்து இருக்கின்றன. மிகவும் வரவேற்க தக்க முயற்சி. வாழ்க வளமுடன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X