பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்து வரும் மகளிர் இலவச பஸ்கள்; நீண்டநேரம் காத்திருப்பால் விரக்தி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை : மதுரைநகரில் மகளிர்இலவச பஸ்கள் எண்ணிக்கை திடீரென குறைந்ததால் பெண்கள்நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகபுகார் எழுந்துள்ளது.எல்லீஸ்நகர், புதுக்குளம், புதுார் உட்பட நகரில் 9 டெப்போக்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதம் மகளிர்இலவச பஸ்களாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தது 300க்கும் மேல் இயக்க வேண்டும்.

மதுரை : மதுரைநகரில் மகளிர்இலவச பஸ்கள் எண்ணிக்கை திடீரென குறைந்ததால் பெண்கள்நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகபுகார் எழுந்துள்ளது.

எல்லீஸ்நகர், புதுக்குளம், புதுார் உட்பட நகரில் 9 டெப்போக்களில் இருந்து 700க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதம் மகளிர்இலவச பஸ்களாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தது 300க்கும் மேல் இயக்க வேண்டும். தற்போது 120 பஸ்கள்வரையே இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் ஓட்டுனர், நடத்துனர்கள் பணி மாற்றம் நேரமான மதியம் 1:30 - 2:30 மணி வரை பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஓட்டுனர்கள்கூறுகையில் “நகரில் ஓட்டை உடைசல் பஸ்கள் எண்ணிக்கை அதிகம்.அவற்றை இயக்குவதுசிரமம். இதனால் பஸ்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஒரு கிளையில் 20 இலவச பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 10 ஆக குறைந்து விட்டது. புறநகர் பகுதிகளில் தட்டுப்பாடின்றி இயக்கப்படுகின்றன” என்றனர்.அதிகாரிகள் கூறுகையில், “போதிய அளவில் இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன. எந்த பகுதிக்கு சேவை தேவை என தெரிவிக்கப்பட்டால் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X