பொது செய்தி

தமிழ்நாடு

தென்னைகளை காப்பாற்றிய மழை 

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பேரையூர் : பேரையூர் பகுதியில் தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து கருக துவங்கிய நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் பல மரங்கள் உயிர் பெற்றுள்ளன.இப்பகுதியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பருவ மழை சரிவர கிடைக்காததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் தென்னை மரங்கள்பெருமளவில் பாதித்துஉள்ளன. பல இடங்களில் பாதியளவில் காய்ந்து கருகிவிட்டன. சில மரங்கள் காய துவங்கி

பேரையூர் : பேரையூர் பகுதியில் தென்னை மரங்கள் வறட்சியால் காய்ந்து கருக துவங்கிய நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் பல மரங்கள் உயிர் பெற்றுள்ளன.

இப்பகுதியில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக பருவ மழை சரிவர கிடைக்காததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் தென்னை மரங்கள்பெருமளவில் பாதித்துஉள்ளன. பல இடங்களில் பாதியளவில் காய்ந்து கருகிவிட்டன. சில மரங்கள் காய துவங்கி குற்றுயிராகஇருந்தன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதத்தில் ஓரளவு மழை பெய்தது. தற்போது பசுமை துளிர்விடத் துவங்கியது. இதில் சில தென்னை மரங்களும் உயிர் பெற்று வளர துவங்கியுள்ளன. மழை தொடர்ந்தால்தான் தென்னைகளும் தொடர்ந்து பலன்தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறியதாவது: காய்ந்து கொண்டுஇருந்த தென்னை மரங்கள் உயிர்பெற்றுள்ளன. பெற்ற பிள்ளையை போல பேணி பாதுகாத்து வளர்த்த மரங்கள்தற்போது உயிர் பெற்று இருப்பது சந்தோஷமாக உள்ளது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X