இழப்பீடு வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இழப்பீடு வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 09, 2021
Share
மதுரை : மதுரை கார்த்திகா மாலதி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் 2020 மார்ச்சில் கொலை செய்யப்பட்டார். மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிந்தனர். விசாரணை முடிந்து மதுரை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். குற்ற வழக்கால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி உள்துறை செயலாளர், மதுரை கலெக்டர், மாவட்ட

மதுரை : மதுரை கார்த்திகா மாலதி. உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் 2020 மார்ச்சில் கொலை செய்யப்பட்டார். மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிந்தனர். விசாரணை முடிந்து மதுரை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர்.

குற்ற வழக்கால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண திட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி உள்துறை செயலாளர், மதுரை கலெக்டர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பித்தேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்: மனுதாரர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அவர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X