தமிழ்நாடு

கண்மாய், கால்வாய்களை மறந்த அதிகாரிகள்; திசைமாறிச்செல்லும் மழைநீர்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி யூனியன்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்களுக்கான நீர் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டன.இப்பகுதி விவசாயத்திற்கு பலன் அளித்து வந்த கண்மாய்கள், கால்வாய்கள் சில இடங்களில் துார்ந்து போயுள்ளன. இதனால் மழைநீர் திசைமாறி சென்று வீணாகிறது. கண்மாய்கள்
 கண்மாய், கால்வாய்களை மறந்த அதிகாரிகள்;  திசைமாறிச்செல்லும் மழைநீர்

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடபட்டி யூனியன்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்களுக்கான நீர் வரத்துக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டன.

இப்பகுதி விவசாயத்திற்கு பலன் அளித்து வந்த கண்மாய்கள், கால்வாய்கள் சில இடங்களில் துார்ந்து போயுள்ளன. இதனால் மழைநீர் திசைமாறி சென்று வீணாகிறது. கண்மாய்கள் வறண்டுள்ளதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளைஅகற்றி துர்வாரி சீரமைத்து கண்மாய்களுக்கு நீர்வந்து சேர நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் ஆண்டுதோறும் விவசாய பரப்பு குறைவதை தடுக்க முடியாது.

இத்தாலுகாவில் ஆறுகளோ, அணைகளோ கிடையாது. மானாவாரி நிலங்களும், 50 சதவீத நிலங்களும் கண்மாய் நீரை பெற்று பாசனம் செய்கின்றன. நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்களை பல ஆண்டுகளாக துார்வாராதது, மழைநீர் வரத்து கால்வாய்கள் பராமரிக்காதது போன்ற காரணங்களால் வறண்டுள்ளன. சீமைக் கருவேல முள்காடாக காட்சியளிக்கின்றன.

குப்பை மேடாகும் கண்மாய்கள்நீர் வரத்து இல்லாததால் ஊரை ஒட்டியுள்ள பல கண்மாய் கரையோரங்கள் குப்பை தொட்டியாக, ஊரின் கழிவு நீர் தேங்கும்இடமாக மாறி உள்ளன. நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பாளர்கள்பிடியில் சிக்கியுள்ளது. அதில் விவசாயம் செய்வோர் சுயநலத்திற்காக கண்மாய், குளங்களில் நீர் தேங்க விடாமல் நீரின்போக்கை மாற்றிவிடுவதும், நீர் நிறைந்தால் ஆக்கிரமிப்பு நிலங்கள் பாதிக்கப்படும் என்பதற்காக நீரை வெளியேற்றி விடுவதும்வாடிக்கையாக நடக்கிறது.

நீர் சுரப்பு குறைந்தது பல இடங்களில் 20 மீட்டர் அகலமுள்ள கால்வாய் 2 மீட்டராக சுருக்கி விட்டனர். இதனால் கண்மாய்க்கு தண்ணீர் வருவதுஇல்லை. பல ஏக்கர் விளை நிலங்கள் பிளாட்டுகளாக மாறின. ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. 'போர்வெல்' நீர் சுரப்பு குறைந்து தண்ணீருக்கு தவிக்கின்றனர்.

விவசாயிகள் கூறுவது என்னகண்மாய்களை பாதுகாக்க வேண்டிய யூனியன், பொதுப்பணித்துறையினர் அதன் நிலைமையை எட்டிக்கூட பார்ப்பதுஇல்லை. ஆக்கிரமிப்பை அகற்றி தர பலமுறை விவசாயிகள் மனுக்கொடுத்தும் எந்த பயனும் இல்லை. கால்வாய் புதர்மண்டியுள்ளதால் மழைகாலங்களில் அதன் வழியாக தண்ணீர் செல்வதில்லை. மழைக்காலம் துவங்கும் முன் சீரமைப்பு பணி மேற்கொள்ளமுன்வர வேண்டும்.

கால்வாய்கள், கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. மண்மேவியும்,முட்புதர்கள் வளர்ந்தும் உருமாறி வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் கண்மாய்கள், கால்வாய்களை பராமரிக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X