மூத்த அரசியல்வாதி திடீர் ஓய்வு அறிவிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மைசூரு: சாம்ராஜ்நகர் பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் அரசியல் ஓய்வு அறிவித்துள்ளார். இது, காங்., முன்னாள் எம்.பி., துருவ நாராயணாவுக்கு லாபமாக அமையும் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.மூத்த அரசியல்வாதியான சீனிவாச பிரசாத், 1980ல் முதன் முறையாக எம்.பி.,யாகி, லோக்சபாவில் நுழைந்தார். அப்போது, இந்திரா பிரதமராகவும், வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர். நான்கு முறை

மைசூரு: சாம்ராஜ்நகர் பா.ஜ., - எம்.பி., சீனிவாச பிரசாத் அரசியல் ஓய்வு அறிவித்துள்ளார். இது, காங்., முன்னாள் எம்.பி., துருவ நாராயணாவுக்கு லாபமாக அமையும் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மூத்த அரசியல்வாதியான சீனிவாச பிரசாத், 1980ல் முதன் முறையாக எம்.பி.,யாகி, லோக்சபாவில் நுழைந்தார். அப்போது, இந்திரா பிரதமராகவும், வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர். நான்கு முறை தொடர்ந்து, அவர் எம்.பி., யானார். மத்திய, மாநில அமைச்சராக பணியாற்றியவர்.
கடந்த, 50 ஆண்டுகளாக அரசியலில் நீடிப்பவர். காங்கிரசிலிருந்த அவர், பல உயர் பதவிகளை பெற்றார். அவருக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் அவரது சொந்த கட்சியினரின் சதியால் நிறைவேறவில்லை. இதற்கு முன் மாநில காங்., தலைவராக இருப்பவர், முதல்வராவார். 1996 தேர்தலில் இவருக்கு டிக்கெட் கிடைத்திருந்தால், அவர் வெற்றி பெற்றிருப்பார். கட்சியில் இருந்த சிலர், சீனிவாச பிரசாத்துக்கு டிக்கெட் கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதனால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு, 1.60 லட்சம் ஓட்டுகள் பெற்றும், அவரால் வெற்றி பெற முடியவில்லை. இப்போதும் கூட, தலித் தலைவர் முதல்வராகவில்லை என்ற வருத்தம் அவருக்கு உள்ளது. சித்தராமையா அமைச்சரவையில், வருவாய்த்துறை அமைச்சராக இருந்த சீனிவாச பிரசாத், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தியடைந்த அவர், காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்து, நஞ்சன்கூடு இடைத்தேர்தலில் களமிறங்கினார்.
ஆனால், ம.ஜ.த.,வுடன் உள் ஒப்பந்தம் செய்து கொண்டு, இவரை சித்தராமையா தோற்கடித்தார். மனம் தளராத சீனிவாச பிரசாத், 2018ல் நஞ்சனகூடு தொகுதியை, மருமகன் ஹர்ஷவர்த்தனுக்கு விட்டுக்கொடுத்து, வெற்றி பெற வைத்தார்.கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், சீனிவாச பிரசாத் களமிறங்குவார் என, யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.
அவர் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இதன் மூலம் தன் சக்தி என்ன என்பதை, அரசியல் எதிரி சித்தராமையாவுக்கு உணர்த்தினார். இதே திருப்தியில், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது முடிவு, காங்., முன்னாள் எம்.பி., துருவ நாராயணாவுக்கு, லாபமாக அமையும் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X