பொது செய்தி

இந்தியா

மாணவர்கள் 30% பேர் தொழிலாளர்களாக மாறினர்: ஆய்வில் திடுக்!

Added : ஆக 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடத்திய ஆய்வில், 30 சதவீதம் பள்ளி செல்லும் மாணவர்கள். தொழிலாளர்களாக மாறியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.கொரோனா அதிகரிப்பால், 2019 - 20 கல்வியாண்டு இறுதியிலிருந்து கர்நாடகாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.முதல் அலை குறைந்த பின், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றி, ஜன., முதல் எஸ்.எஸ்.எல்.சி.,

பெங்களூரு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் நடத்திய ஆய்வில், 30 சதவீதம் பள்ளி செல்லும் மாணவர்கள். தொழிலாளர்களாக மாறியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அதிகரிப்பால், 2019 - 20 கல்வியாண்டு இறுதியிலிருந்து கர்நாடகாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.முதல் அலை குறைந்த பின், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றி, ஜன., முதல் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட்டது.
தொடர்ந்து இரண்டாம் அலையின் தாக்கத்தின் அடிப்படையில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் பலரும் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருவதும், குழந்தை திருமணங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன.
ஆன் லைன் வகுப்புகளை பள்ளிகள் துவங்கினாலும், நெட்வொர்க் பிரச்னை, மொபைல் போன் பெறுவதற்கு கூட வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி கல்வியை விட்டு தொலைதுாரம் சென்று கொண்டிருக்கின்றனர். மாணவர்களின் தற்போதையை நிலையை அறிவதற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாநிலத்திலுள்ள 32 கல்வி மாவட்டங்களில் ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். இதில், 30 சதவீத மாணவர்கள், தங்களின் குடும்பத்துக்கு உதவி செய்யும் வகையில், தொழிலாளர்களாக மாறியுள்ளதாக தெரிவித்தனர்.
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களில், 30 சதவீதம் பேர், கல்வியை இரண்டாம் பட்சமாகி விட்டு, குடும்பத்துக்கு உதவி செய்ய பணியில் சேர்ந்துள்ளனர். 40 சதவீத மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்தால், மாநிலத்தின் கல்வி தரம் குறைவதுடன், பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடும். இவ்வாறு பேராசிரியர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-ஆக-202120:17:29 IST Report Abuse
Loganathan Kuttuva பல மாணவர்களுக்கு தொழில் அனுபவம் கிடைத்துள்ளது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X