பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பை தடுக்க திட்டம்; ரூ.10 கோடியில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை - ராமேஸ்வரம், மதுரை ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. மேலும் மண் குவிவதால் விபத்தும்நடக்கிறது. இதனை தவிர்க்க ரூ.10 கோடி செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.30கோடி செலவில் இருவழிச்சாலைகள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் முதல் பட்டணம்காத்தான் வரை - ராமேஸ்வரம், மதுரை ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. மேலும் மண் குவிவதால் விபத்தும்நடக்கிறது. இதனை தவிர்க்க ரூ.10 கோடி செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.30கோடி செலவில் இருவழிச்சாலைகள் நான்குவழிச்சாலைகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நகர், பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், சக்கரகோட்டை ஊராட்சிகளுக்கு உட்பட்ட மதுரைரோடு, ராமேஸ்வரம் ரோட்டில் 7 கி.மீ., துாரத்திற்கு ரோட்டின் நடுவே ரூ.1.80கோடி செலவில் புதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சர்ச் ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, பாரதிநகர், ரயில்வே பீடர் ரோடு ஆகிய போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துஉள்ளன. மேலும் ரோட்டோரம் மண்குவியல் காரணமாக இரவுநேரத்தில் விபத்தும் நடக்கிறது. இதனையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்படாத வகையில் மண்ணை அகற்றவிட்டு அச்சுந்தன் வயல் முதல் பட்டணம்காத்தான் வரை ரோட்டோரம் நடைபாதை வரை பேவர் பிளாக் கற்கள் பாதிக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.10கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்துள்ளோம். அரசின் நிதி கிடைத்தவுடன் இப்பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X