பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் கேரளாவில் தஞ்சம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் மீனவர்கள் பிழைப்பு தேடி கேரளா, கர்நாடகாவில்தஞ்சம் புகுந்துள்ளனர்.மீன்பிடி தடை காலம் முடிந்து ஜூன் 30 முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல், வலைகள் மூழ்கடிப்பு, தொழில் நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.ராமேஸ்வரத்தில் கடந்த சில வாரமாக 70 சதவீத

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம் மீனவர்கள் பிழைப்பு தேடி கேரளா, கர்நாடகாவில்தஞ்சம் புகுந்துள்ளனர்.

மீன்பிடி தடை காலம் முடிந்து ஜூன் 30 முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல், வலைகள் மூழ்கடிப்பு, தொழில் நஷ்டம் ஏற்பட்டு மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்தனர்.ராமேஸ்வரத்தில் கடந்த சில வாரமாக 70 சதவீத படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி உள்ளதால், ஏராளமான மீனவர்கள் வேலை இன்றி வீடுகளில் முடங்கி உள்ளனர்.

அன்றாட குடும்ப செலவுக்கு மீனவர்கள் தவித்தனர்.கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனில் இருந்து 500க்கும் மேலான மீனவ இளைஞர்கள்பிழைப்புக்காக கேரளா, கர்நாடகா கடலில் கூலிக்கு மீன்பிடிக்க சென்றுஉள்ளனர்.பாக்ஜலசந்தி கடலில்தமிழக மீனவர்கள் சுமூகமாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசு தீர்வு காண விடில் இனிவரும் காலத்தில் குடும்பத்துடன் கேரளா, கர்நாடகாவில் தஞ்சம் புகும் நிலை ஏற்படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X