தமிழ்நாடு

ஊரணிகளில் கழிவு நீர் கலப்பதால் சுகாதார பாதிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரணிகளில் கழிவு நீர் கலப்பதால் மாசுபடுவதோடு மக்களுக்கு சுகாதார பாதிப்பை ஏற்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் நகராட்சியில் லெட்சுமிபுரம் ஊரணி, முகவை ஊரணி, நீலகண்டி ஊரணி, நொச்சிவயல் சின்ன ஊரணி, பெரிய ஊரணி, கூரிசாத்த அய்யனார் கோயில் ஊரணி, சிதம்பரம்பிள்ளைஊரணி, சுண்ணாம்பு ஊரணி,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரணிகளில் கழிவு நீர் கலப்பதால் மாசுபடுவதோடு மக்களுக்கு சுகாதார பாதிப்பை ஏற்படுத்துவதால் மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் நகராட்சியில் லெட்சுமிபுரம் ஊரணி, முகவை ஊரணி, நீலகண்டி ஊரணி, நொச்சிவயல் சின்ன ஊரணி, பெரிய ஊரணி, கூரிசாத்த அய்யனார் கோயில் ஊரணி, சிதம்பரம்பிள்ளைஊரணி, சுண்ணாம்பு ஊரணி, சாயக்கார ஊரணிகள் உள்ளன.சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான், சூரங்கோட்டை, பேராவூர் பகுதிகளில் தொருவளூர்ஆலமரத்து ஊரணி, பெரிய கிணற்று ஊரணி, காசிநாத ஊரணி, கவரன்குளம் ஊரணி, இடையர்வலசை ஊரணி, களத்தாவூர் மடத்துக்குளம் ஊரணி, பேராவூரணி, முதுநாள் சுடுகாட்டு ஊரணி, செல்லியம்மன்கோயில் ஊரணி, சூரங்கோட்டை வண்ணார் ஊரணி, அச்சுந்தன்வயல்ஊரணி, சுடகாட்டு ஊரணி, கூரியூர் அம்மன்கோயில் ஊரணி, சாக்கு ஊரணி, அய்யா ஊரணி, புத்தேந்தல் கண்ணுார் அய்யனார் ஊரணி, அம்மன்கோயில் ஊரணி, அய்யனார் கோயில் ஊரணி, காலனி ஊரணி, காரேந்தல் ஊரணி, காவனுார் ஊரணி, புல்லங்குடி ஊரணி, பாரதிநகர் பாம்பூரணி, பட்டணம்காத்தான் சுண்ணாம்பு ஊரணி என 30க்கும் மேற்பட்ட ஊரணிகள் நகரை ஒட்டிய பகுதிகளில் உள்ளன

இவை மக்களின் நிலத்தடி நீராதாரமாக உள்ளன. மழைகாலங்களில் இந்த ஊரணிகள் நிறைந்தால் வீடுகளில் புழக்கத்திற்கான தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.கிராமப்புற ஊரணிகளை தவிர்த்து ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் நகராட்சி பகுதிகளிலுள்ள ஊரணிகள்,தொண்டி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் பல ஊரணிகளில் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

நயினார்கோவில் தீர்த்த குளம் ஊரணி, உத்தரகோசமங்கை தீர்த்தகுளம், திருப்புல்லாணி சக்கர தீர்த்த குளம் ஊரணியை கூட கழிவு நீரால் மாசுபடுத்துகின்றனர்.ராமநாதபுரம் நகர் பகுதியில் பல ஊரணிகளில் வீடுகள், ஓட்டல்களின் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாரதிநகர் சோத்துாரணி பச்சை நிறமாகி துர்நாற்றம் வீசுகிறது.ஊரணிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கலெக்டர் சந்திரகலா நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X