பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சையில் கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முதலிடம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பெங்களூரு: கொரோனா நேரத்தில் 'ஆயுஷ்மான் பாரத்- ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், மிக அதிகமான நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிய, கர்நாடக மருத்துவமனைகளின் பட்டியலில், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது.பட்டியல்கடந்த 2020ல், 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், சிறப்பாக மருத்துவ சிகிச்சையளித்த, பத்து

பெங்களூரு: கொரோனா நேரத்தில் 'ஆயுஷ்மான் பாரத்- ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், மிக அதிகமான நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிய, கர்நாடக மருத்துவமனைகளின் பட்டியலில், கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது.


பட்டியல்


கடந்த 2020ல், 'ஆயுஷ்மான் பாரத் - ஆரோக்கிய கர்நாடகா' திட்டத்தின் கீழ், சிறப்பாக மருத்துவ சிகிச்சையளித்த, பத்து மருத்துவமனைகளின் பட்டியலை, சுகாதாரம், குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரின் கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை, 8,676 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து, முதலிடத்தில் உள்ளது.
ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, 4,199 பேருக்கு சிகிச்சையளித்து, இரண்டாம் இடத்தில் உள்ளது. மைசூரின் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை, 3,415; ராஜிவ் மார்பக நோய் மருத்துவமனை, 2,699; நிமான்ஸ் மருத்துவமனை 1,936 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து முறையே 3வது, 4வது, 5வது இடத்தில் உள்ளன.
மருத்துவ கல்லுாரிகளில், ஹூப்பள்ளியின் கிம்ஸ்; மாவட்ட மருத்துவமனைகளில் சித்ரதுர்கா மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை;கொப்பாலின் கங்காவதி மருத்துவமனை; சமுதாய சுகாதார மையங்களில், ஹாசன் ஹிரிசாவே சுகாதார மையம், ஆரம்ப சுகாதார மையங்கள், விஜயபுராவின் வந்தல் மருத்துவமனை முதலிடத்தில் உள்ளன.
அதிக சிகிச்சைஇம்மருத்துவமனைகள், கொரோனாவுக்கு இடையிலும், ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய கர்நாடகா திட்டத்தின் கீழ், மிக அதிகமான நோயாளிகளுக்கு, சிகிச்சையளித்துள்ளன. கித்வாய் புற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் ராமச்சந்திரா கூறியதாவது:
கொரோனா தீவிரமாக இருந்த போதும், கித்வாய் மருத்துவமனையில், ஒருநாளும் சிகிச்சையை நிறுத்தவில்லை.ஊரடங்கால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை, குறைவாக இருந்தும், வழக்கம் போன்று, சிகிச்சை தொடர்ந்தது.புற்று நோயாளிகளுக்கு, சிகிச்சை தாமதமாகும் அளவுக்கு நோய் முற்றிவிடும். ரேடியோ தெரபி, கிமோதெரபி சிகிச்சையை, தள்ளிவைக்க முடியாது.கொரோனா நேரத்திலும், அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தது திருப்தியளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X