பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லி கொட்டி நாளாச்சு; புதுரோடு எப்ப போடுவாங்க

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சக்கரகோட்டை : ராமநாதபுரம் அருகே நேருநகரில் புதிதாக ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாக அப்படியே கிடக்கிறது. ரோடு பணியை தொடங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சக்கரகோட்டை ஊராட்சிக்குட்பட்ட நேருநகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நகரின் தெருக்களில் ரோடு அமைத்து பலஆண்டுகள் ஆகிவிட்டதால் குண்டும் குழியுமாக உள்ளன. இந்நிலையில்

சக்கரகோட்டை : ராமநாதபுரம் அருகே நேருநகரில் புதிதாக ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பல நாட்களாக அப்படியே கிடக்கிறது. ரோடு பணியை தொடங்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சக்கரகோட்டை ஊராட்சிக்குட்பட்ட நேருநகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நகரின் தெருக்களில் ரோடு அமைத்து பலஆண்டுகள் ஆகிவிட்டதால் குண்டும் குழியுமாக உள்ளன. இந்நிலையில் ஊராட்சி சார்பில், சட்டசபை தேர்தலுக்கு முன்பே நேருநகர் 5வது தெருவில் புதிதாக ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டியுள்ளனர்.

நிர்வாக காரணத்திற்காக பல நாட்களாக ரோடு அமைக்கும் பணி அப்படியே கிடப்பில் விடப்பட்டுள்ளது.ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் இரவு நேரத்தில் விபத்து நடக்கிறது. விரைவில் நேருநகரில் புதிய ரோடு அமைக்கும் பணியை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என மக்கள்வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X