காலாவதி பொருள் விற்ற கடைக்கு அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காலாவதி பொருள் விற்ற கடைக்கு அபராதம்

Added : ஆக 09, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காலாவதியான பாக்கெட் உணவு பொருட்களை விற்ற நான்கு கடைகளுக்குஉணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.4000 அபராதம் விதித்தனர். மேலும் 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.ராமநாதபுரம் புதுபஸ் ஸ்டாண்டிலுள்ள பேக்கரியில் ஆக.6ல் விற்ற சமோசாவில் அரணை பல்லி இருந்ததால் அதனை சாப்பிட்ட சிறுவன் மயக்கமடைந்து கீழக்கரை அரசு மருத்துவமனையில்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் காலாவதியான பாக்கெட் உணவு பொருட்களை விற்ற நான்கு கடைகளுக்குஉணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.4000 அபராதம் விதித்தனர். மேலும் 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

ராமநாதபுரம் புதுபஸ் ஸ்டாண்டிலுள்ள பேக்கரியில் ஆக.6ல் விற்ற சமோசாவில் அரணை பல்லி இருந்ததால் அதனை சாப்பிட்ட சிறுவன் மயக்கமடைந்து கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து பேக்கரிக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.3000 அபராதம் விதித்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.சிறுவன் தந்தை குறிப்பிட்ட கடை மீது புகார் தெரிவித்த நிலையில், கடை உரிமையாளர்கள் இதனை மறுத்துள்ளனர்.

இருப்பினும் சமோசா சிவகங்கை மருத்துவக்கல்லுாரிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் விஜயகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று ராமநாதபுரம் புது பஸ்ஸ்டாண்ட் கடைகள், அரண்மனை பகுதிகளில் டாக்டர் விஜயகுமார் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமேஸ்வரம் லிங்கவேல், கீழக்கரை ஜெயராஜ், கமுதி, முதுகுளத்துார் முத்துச்சாமி சோதனை நடத்தினர்.அப்போது 4 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், நான்கரை கிலோ காலாவதி உணவு பொருட்கள், லேபிள் இல்லாத 12 கிலோ உணவு பொருட்கள், 6 லிட்டர் பயன்படுத்தப்பட்ட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X