பரமக்குடியில் உடைந்த வாறுகால் கழிவுநீரால் வீடுகளுக்கு ஆபத்து

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வாறுகால்கள் சீராக இன்றி கழிவுநீர் தெருவோரம் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.பரமக்குடி பாலன் நகர், வசந்தநகர், சின்னக்கடை பகுதி, பெரிய கடை தெருக்கள், எமனேஸ்வரம், ஜீவாநகர் என நகர் முழுவதும் வாறுகால் பராமரிப்பின்றி உள்ளது. வாறுகாலையொட்டியுள்ள பழைய களிமண் மற்றும் காரை வீடுகளின் சுவர்கள்இடிந்து

பரமக்குடி : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வாறுகால்கள் சீராக இன்றி கழிவுநீர் தெருவோரம் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

பரமக்குடி பாலன் நகர், வசந்தநகர், சின்னக்கடை பகுதி, பெரிய கடை தெருக்கள், எமனேஸ்வரம், ஜீவாநகர் என நகர் முழுவதும் வாறுகால் பராமரிப்பின்றி உள்ளது. வாறுகாலையொட்டியுள்ள பழைய களிமண் மற்றும் காரை வீடுகளின் சுவர்கள்இடிந்து விபத்துக்குஉள்ளாகின்றன.எமனேஸ்வரத்தில் நெசவாளர்களின் ஓட்டு வீடுகள்மழை நேரங்களில் சேதமடைவது தொடர்கிறது.

மேலும் ரோடுகள் உயரமாக போடப்படும் நிலையில், வாறுகால் சீரமைக்காமல் உள்ளதால், மழைநீருடன் கழிவு கலந்து வீடுகளுக்குள் புகுகின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.ஆகவே பரமக்குடி நகராட்சியில் ரோடுகளை சீரமைப்பதற்கு முன், உடனடி பணியாக தற்போது உள்ள அனைத்து வாறுகால்களையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X