தரிசு நிலத்தை விளை நிலமாக்க மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலத்தை விளை நிலமாக்க மானியம்

Added : ஆக 09, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் பெத்தார் தேவன் கோட்டை பகுதியில், தரிசு நிலங்களில் உள்ள கருவேலமரங்களை அகற்றும்பணியை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் பார்வையிட்டு விவசாயிகளிடம் கூறியதாவது:தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு, அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு 5360 வீதம், ஒரு எக்டேருக்கு 13,400

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம் பெத்தார் தேவன் கோட்டை பகுதியில், தரிசு நிலங்களில் உள்ள கருவேலமரங்களை அகற்றும்பணியை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கரமணியன் பார்வையிட்டு விவசாயிகளிடம் கூறியதாவது:தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுவதற்கு, அரசு மானியமாக ஒரு ஏக்கருக்கு 5360 வீதம், ஒரு எக்டேருக்கு 13,400 வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தரிசாக உள்ள விளை நிலங்களில், உள்ள கருவேல மரங்களை அகற்றி பின்னர்நிலத்தை சமப்படுத்தி, சிறு தானியங்களான, கேழ்வரகு, குதிரைவாலி, எண்ணெய் வித்துக்கள், போன்ற பயிர்களை பயிர் செய்ய வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில், இத்திட்டத்தின்கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்தி விளைநிலமாக மாற்ற 80 எக்டேர் இலக்கு இணைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X