தமிழ்நாடு

விடிவு கிடைத்தது: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களின் அடாவடிக்கு ... நெல் கொள்முதல் மையங்களை கையாளும் கூட்டுறவுத்துறை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
மதுரை: மதுரையில் நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கு மாற்றாக கூட்டுறவுத் துறை மையத்தை கையாள உள்ளது.குறுவை சீசன் அறுவடைக்கு செப்டம்பரிலும் சம்பா சீசனுக்கு ஜனவரி மற்றும் கோடை சீசனுக்கு ஜூனிலும் நெல் கொள் முதல் மையங்கள் அமைக்கப்படும். இவை நுகர்பொருள் வாணிப
 விடிவு கிடைத்தது: நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களின் அடாவடிக்கு ...  நெல் கொள்முதல் மையங்களை கையாளும் கூட்டுறவுத்துறை

மதுரை: மதுரையில் நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.60 முதல் ரூ.100 வரை நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் அதற்கு மாற்றாக கூட்டுறவுத் துறை மையத்தை கையாள உள்ளது.

குறுவை சீசன் அறுவடைக்கு செப்டம்பரிலும் சம்பா சீசனுக்கு ஜனவரி மற்றும் கோடை சீசனுக்கு ஜூனிலும் நெல் கொள் முதல் மையங்கள் அமைக்கப்படும். இவை நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டாலும் தனிநபர்கள், அரசியல்வாதிகளே அதை நிர்வகிக்கின்றனர். நெல் விவசாயிகளிடம் 65 கிலோ மூடை ஒன்றுக்கு ரூ.60 - 100 வரை கமிஷன் வாங்கிய பின்பே வாங்குகின்றனர்.

இதில் வாணிப கழக ஊழியர்கள், மையத்தை நிர்வகிப்பவர்கள் கமிஷனை பகிர்ந்து கொள்கின்றனர். சிறிதளவு தொகை மட்டும் மூடையை ஏற்றி இறக்குபவர்களுக்கு கூலியாக தரப்படுகிறது. கமிஷன் தராத விவசாயிகளிடம் மூடையை வாங்காமல் ஏமாற்றுகின்றனர்.

இதனால் சில நேரங்களில் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். வியாபாரிகள் அதே நெல்லை கொள்முதல் மையத்தில் விற்று காசாக்குகின்றனர். எல்லா வழியிலும் விவசாயிகள் பாதிக்கப்படுவதால் அரசே நெல் கொள்முதல் மையத்தை தாலுகாவுக்கு ஒன்றாக நிரந்தரமாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து கூட்டுறவு துறை மூலம் நெல் கொள்முதல் மையங்கள் நிர்வகிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்ட அளவில் கலெக்டர், வேளாண்மை இணை இயக்குனர், துணை இயக்குனர், கூட்டுறவு இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிபகழக நிர்வாகிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் கூட்டம் நடைபெற்றது.

கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறுகையில், ''நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் நெல் கொள் மையங்கள் செயல்படுத்தப்படும். வரும் சீசனில் முதற்கட்டமாக 10 இடங்களில் மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்'' என்றார். விவசாயிகள் கூறுகையில்,''எப்போதும் நெல் விளையும் செல்லம்பட்டி, வாடிப்பட்டி மற்றும் மேலுாரில் கூட்டுறவுத் துறை மூலம் நிரந்தர கொள்முதல் மையம் அமைக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X