உளுந்து பயிரிட்டவர்கள் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்து பயிரிட்டவர்கள் ஏமாற்றம்

Added : ஆக 09, 2021
Share
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் மழையை எதிர்பார்த்து உளுந்து பயிரிட்டவர்கள், மழை பெய்யாததால் ஏமாற்றமடைந்து கவலையில் உள்ளனர்.இத்தாலுகாவில் ராபி பருவத்தின் போது எஸ்.புதூர் ஒன்றியத்தில் 400 ஏக்கரிலும், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 200 ஏக்கரிலும் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி சில விவசாயிகள் 100 ஏக்கரில் காரிப்

சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் மழையை எதிர்பார்த்து உளுந்து பயிரிட்டவர்கள், மழை பெய்யாததால் ஏமாற்றமடைந்து கவலையில் உள்ளனர்.

இத்தாலுகாவில் ராபி பருவத்தின் போது எஸ்.புதூர் ஒன்றியத்தில் 400 ஏக்கரிலும், சிங்கம்புணரி ஒன்றியத்தில் 200 ஏக்கரிலும் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்வது வழக்கம்.இந்நிலையில் 20 நாட்களுக்கு முன்பு பெய்த மழையை நம்பி சில விவசாயிகள் 100 ஏக்கரில் காரிப் பருவத்திலேயே உளுந்து விதைத்தனர்.

செடிகள் வளர்ந்து இலைகள் துளிர்க்கும் நேரத்தில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த உளுந்து பயிர்களும் கருகி வருகிறது.விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டு ராபி பருவத்தில் உளுந்து பயிரிட்டு பருவம் தவறிய மழையால் நஷ்டம் அடைந்தது. தற்போது முன்கூட்டியே காரிப் பருவத்தில் பயிரிட்டுள்ளோம். தற்போது மழை இல்லாமல் பயிர்கள் காய்ந்து வருகிறது, என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X