ஊரணியில் கலக்கும் கழிவு நீர்; சிங்கம்புணரி மக்கள் அச்சம்| Dinamalar

ஊரணியில் கலக்கும் கழிவு நீர்; சிங்கம்புணரி மக்கள் அச்சம்

Added : ஆக 09, 2021
Share
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கழிவுநீர் குட்டையாகிப்போன ஊரணியில் அமைக்கப்பட்ட போர்வெல் கிணற்றிலிருந்து வினியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.இப்பேரூராட்சியின் மையப்பகுதியான நான்கு ரோடு சந்திப்பு அருகே நல்லாகுளம் ஊரணி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும் என்பது தெரியாத நிலையில் ஊரணியை சுற்றியுள்ள

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கழிவுநீர் குட்டையாகிப்போன ஊரணியில் அமைக்கப்பட்ட போர்வெல் கிணற்றிலிருந்து வினியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இப்பேரூராட்சியின் மையப்பகுதியான நான்கு ரோடு சந்திப்பு அருகே நல்லாகுளம் ஊரணி ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும் என்பது தெரியாத நிலையில் ஊரணியை சுற்றியுள்ள வீடுகள், கட்டடங்கள், வர்த்தக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் செப்டிக் டேங்க் கழிவு நேரடியாக இந்த ஊரணிக்குள் செல்கிறது.இந்த ஊரணி எப்போதும் அசுத்தமும் துர்நாற்றமும் நிறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊரணியில் போர்வெல் அமைக்கப்பட்டு எடுக்கப்படும் தண்ணீர் நகரின் சில பகுதிகளுக்கு குடிநீராக விநியோகிக்கப்படுகிறது.

பல பகுதி மக்கள் இத்தண்ணீரையே குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். சோப்பு உள்ளிட்ட பயன்படுத்தப்பட்ட ரசாயனக்கழிவுகளும், செப்டிக் டேங்க் கழிவுகளும் ஊரணியில் கலக்கும் நிலையில் அவை போர்வெல் தண்ணீருடன் கலக்க வாய்ப்புள்ளது என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.எனவே இந்த ஊரணி போர்வெல் தண்ணீர் குடிக்கவும் சமைப்பதற்கும் உகந்ததா என்பதை முறையாக ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X