பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூரில் மாநகர பஸ் டிப்போ வேண்டும்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருவள்ளூர்: திருவள்ளூரில், மாநகர பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.சென்னையில் இருந்து, திருவள்ளூருக்கு, மாநகர பஸ் இயக்கப்படுகிறது. சென்னை, கோயம்பேடு, மந்தவெளி, தி.நகர், பூந்த மல்லி, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருவள்ளூருக்கு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், இரவு 7:00 மணிக்குள்ளும், காலையில், 7:00 மணிக்கு மேலும்

திருவள்ளூர்: திருவள்ளூரில், மாநகர பஸ் டிப்போ அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சென்னையில் இருந்து, திருவள்ளூருக்கு, மாநகர பஸ் இயக்கப்படுகிறது. சென்னை, கோயம்பேடு, மந்தவெளி, தி.நகர், பூந்த மல்லி, அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, திருவள்ளூருக்கு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள், இரவு 7:00 மணிக்குள்ளும், காலையில், 7:00 மணிக்கு மேலும் தான் இயக்கப்படுகின்றன.
இதற்கு காரணம், திருவள்ளூரில் இருந்து, முதல் நாள் மாலை செல்லும் பஸ்கள், சென்னையில் இருந்து, காலை 5:00 மணிக்கு மேல் இயக்கப்படுவது தான். எனவே, திருவள்ளூரில், மாநகர பஸ் டிப்போ ஏற்படுத்தினால், பேருந்துகளை, அதிகாலையில் முதல் இயக்கலாம். எனவே, மாநகர போக்குவரத்து கழகம், திருவள்ளூரில் டிப்போ ஏற்படுத்த வேண்டும்.
மேலும், திருவள்ளூர் - காக்களூர் - செவ்வாபேட்டை - திருநின்றவூர் வழியாக தாம்பரத்திற்கும், கோயம்பேட்டுக்கும் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X