பொது செய்தி

தமிழ்நாடு

பாகற்காய் விளைச்சல் இல்லை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பூவந்தி : பூவந்தி வட்டாரத்தில் போதிய மழையில்லாததால் பாகற்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.பூவந்தி கண்மாய் பகுதியில் விவசாயிகள் பலரும் பாகற்காய் பயிரிட்டுள்ளனர். பயிரிட்ட இரு மாதங்கள் கழித்து வாரம் ஒருமுறை பாகற்காய் பறிக்கப்பட்டு சிவகங்கை, மதுரை, மேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.பாகற்காய்க்கு நல்ல

பூவந்தி : பூவந்தி வட்டாரத்தில் போதிய மழையில்லாததால் பாகற்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பூவந்தி கண்மாய் பகுதியில் விவசாயிகள் பலரும் பாகற்காய் பயிரிட்டுள்ளனர். பயிரிட்ட இரு மாதங்கள் கழித்து வாரம் ஒருமுறை பாகற்காய் பறிக்கப்பட்டு சிவகங்கை, மதுரை, மேலுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.பாகற்காய்க்கு நல்ல விலை உள்ள நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.விவசாயி மீனாள் கூறுகையில் கொடி பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகை இருந்தாலும் இப்பகுதியில் 100 ஏக்கருக்கும் மேலாக மிதி பாகற்காய் பயிரிடப்படுகிறது.

கடந்தாண்டு தினசரி ஒரு நபர் பத்து கிலோ வரை பறித்து விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது இரண்டு கிலோ கூட கிடைக்கவில்லை.களை பறிக்க உள்ளிட்டவைகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் தற்போது முதலீடு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. லேசான மழை பெய்தால் கூட பாகற்காய் நல்ல விளைச்சல் கண்டு விடும், கடந்த இரு மாதங்களாக மழை இல்லாததால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X