பொது செய்தி

தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க 75 'செக்டார் பீட்'; செந்தில்குமார் எஸ்.பி., பேட்டி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீசார் விரைந்து செயல்படும் விதத்தில் 75 குழுக்களாக பிரித்து செக்டார் பீட்' அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பதாக செந்தில்குமார் எஸ்.பி.,தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இந்த ஆண்டில் 11 ஆயிரம் பேர் வரை பல்வேறு விதமான புகார் அளித்துள்ளனர். மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் நடக்கும் சம்பவம், பிரச்னை குறித்து 100 க்கு அழைத்தால்

சிவகங்கை : மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க போலீசார் விரைந்து செயல்படும் விதத்தில் 75 குழுக்களாக பிரித்து செக்டார் பீட்' அமைத்து சுழற்சி முறையில் கண்காணிப்பதாக செந்தில்குமார் எஸ்.பி.,தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: இந்த ஆண்டில் 11 ஆயிரம் பேர் வரை பல்வேறு விதமான புகார் அளித்துள்ளனர். மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் நடக்கும் சம்பவம், பிரச்னை குறித்து 100 க்கு அழைத்தால் உடனுக்குடன் செயல்பட ஏதுவாக செக்டார் பீட்' அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிவர். குறிப்பாக சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்துார் பகுதியில் அதிகளவில் செக்டார் பீட்' போலீசார் செயல்படுவர்.

85 குழுக்களாக செக்டார் பீட்' அமைத்து அதில் முதற்கட்டமாக 75 பீட்கள் இயங்கி வருகிறது. இக்குழுவினர் சந்தேக நபரிடம் அங்கேயே கைரேகை' பதிவினை எடுத்து சிசிடிஎன்எஸ்' வெப்சைட்டில் குற்றவாளியா என கண்டறிவர்.இது தவிர அலைபேசியில் போட்டோ எடுத்து அதனையும் ஆய்வு செய்யப்படும். தற்போது கந்து வட்டி வசூலிப்பதாக அதிக புகார்கள் வருகின்றனர்.

விதிகளை மீறி கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.கண்டனுார் 25 பவுன் நகை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்டுள்ளோம் என்றார். கூடுதல் எஸ்.பி., முரளீதரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ.,க்கள் கோடீஸ்வரன், முகமது எர்சாத் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X