தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும் பணிகளில் வீணாகும் நிதி! தரமில்லாமல் பணிகளை மேற்கொள்பவர்களிடம் வசூலிக்க வேண்டும்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
காரியாபட்டி, : விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும் பணிகள் தரமின்றி குறுகிய காலத்தில் சேதமடைகிறது. அவ்வாறு கட்டுபவர்களிடமே பணத்தை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் ரோடு அமைத்தல், கால்நடை குடிநீர் தொட்டி அமைத்தல், மண்புழு உரக்கூடம், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மத்திய,

காரியாபட்டி, : விருதுநகர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செய்யப்படும் பணிகள் தரமின்றி குறுகிய காலத்தில் சேதமடைகிறது. அவ்வாறு கட்டுபவர்களிடமே பணத்தை திரும்ப வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் ரோடு அமைத்தல், கால்நடை குடிநீர் தொட்டி அமைத்தல், மண்புழு உரக்கூடம், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஊரக வளர்ச்சி முகமை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் இப்பணிகள் அனைத்தும் தரம் இல்லாமல் செய்யப்படுவதால் குறுகிய காலத்திலேயே சேதமடைகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுக்காமல் இருக்கின்றனர். இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் தரமாக செய்யப்பட்டுள்ளனவா என்பதை கண்காணிக்க குழு அமைத்து தர சான்று வழங்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் சேதமடையும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்தே பணம் வசூலித்து சரி செய்யும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் சேதம்

கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் தரமில்லாமல் செய்யப்படுகின்றன. ரோடுகள் நூல் கணத்தில் அமைக்கப்படுவதால் குறுகிய காலத்திலே பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. தரமான பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சித்துராமன், சமூக ஆர்வலர், காரியாபட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X