பொது செய்தி

தமிழ்நாடு

சிவகங்கை மாவட்டத்தில் ஆடி அமாவாசை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : ஆடி அமாவாசையான நேற்று தர்ப்பணம் கொடுக்க விதிக்கப்பட்ட தடையால் மக்கள் சிரமப்பட்டனர். அமாவாசையன்று நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.காரைக்குடி கோவிலுார் தெப்பக்குளம், முத்தாலம்மன், நகரச்சிவன் கோயில் உள்ளிட்ட கோயில் தெப்பங்களில் தர்ப்பண பூஜை நடக்கும். கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குள் செல்ல தடை உள்ளது.மக்கள் அதிகம் கூடுவதை

சிவகங்கை : ஆடி அமாவாசையான நேற்று தர்ப்பணம் கொடுக்க விதிக்கப்பட்ட தடையால் மக்கள் சிரமப்பட்டனர்.

அமாவாசையன்று நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.காரைக்குடி கோவிலுார் தெப்பக்குளம், முத்தாலம்மன், நகரச்சிவன் கோயில் உள்ளிட்ட கோயில் தெப்பங்களில் தர்ப்பண பூஜை நடக்கும். கொரோனா பரவல் காரணமாக கோயில்களுக்குள் செல்ல தடை உள்ளது.மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. நேற்று ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்ய கோயில் தெப்பங்களுக்கு சென்றனர். தடை காரணமாக பூஜை செய்யப்படாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒருசில கோயில் தெப்பங்களில் தர்ப்பண பூஜை நடந்தது.

திருப்புவனம்

திருப்புவனத்தில் நேற்று நீராட வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். பித்ரு தோஷங்கள் நீங்க, அமாவாசை தினங்களில் பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்களில் நீராடி தர்ப்பணம் , திதி கொடுப்பது இந்துக்கள் வழக்கம்.கொரானோ பரவலை காரணம் காட்டி அரசு ஆடி அமாவாசை தினங்களில் மக்கள் கூடும் இடங்களில் தடைவிதித்தது. திருப்புவனத்தில் வைகை ஆற்றங்கரையில் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

நேற்று அதிகாலை முதல் வந்த பக்தர்களை தடுத்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் திதி, தர்ப்பணம் கொடுக்காமல் மூடப்பட்ட புஷ்பவனேஸ்வரர் ஆலயம் முன் பக்தர்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.இளையான்குடிஇளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை, தீபாராதனை நடந்தது.

இளையான்குடி, மானாமதுரை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காசி சிவன் சந்நிதியில் காசி தீர்த்தம் விட்டு வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X