தமிழ்நாடு

கம்பம் பகுதியில் 'டெங்கு' காய்ச்சல் அறிகுறி! ஊராட்சிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கலாம்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
கம்பம் : கம்பம் பகுதியில் 'டெங்கு' காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. இதனை தடுக்க ஊராட்சிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.கம்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்சல் தாக்கமும் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக டெங்கு பாதித்து சிகிச்சைக்கென மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆரம்ப சுகாதார

கம்பம் : கம்பம் பகுதியில் 'டெங்கு' காய்ச்சல் பரவ துவங்கியுள்ளது. இதனை தடுக்க ஊராட்சிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு காய்சல் தாக்கமும் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக டெங்கு பாதித்து சிகிச்சைக்கென மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு பாதித்தவர்களை கண்டறிந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல், கண்வலி ஏற்படுவதாக கூறுகின்றனர்.


ஆலோசனை:


சித்தா டாக்டர் சிராசுதீன், ''டெங்குபாதித்தவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு நல்ல பலன் தரும். வீடுகள், பணிபுரியும் இடங்களில் மழைநீர் தேங்காமலும், கொசு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிறு பாத்திரங்கள், டயர்கள், சிரட்டைகளில் சிறிதளவு சுத்தமான நீர் தேங்கினாலும் ஏடிஎஸ் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும்'' என்றார்.


நிலவேம்பு கஷாயம்:


மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கபசுர குடிநீர் வினியோகிக்க ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார். அந்தந்த வட்டாரத்தில் உள்ள சித்த மருத்துவமனைகளில் தலா 2 கிலோ கபசுர குடிநீர் பொடி பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளுக்கு, உத்தமபாளையம் அரசு மருத்துவனை மூலம் கபசுர குடிநீர் பொடி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X