பொது செய்தி

தமிழ்நாடு

சின்னகாவணம் கிராமத்தில் மணல் திருட்டால் பாலத்திற்கு ஆபத்து

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பொன்னேரி: இரவு நேரங்களில் ஆரணி ஆற்றில் தொடரும் மணல் திருட்டால், பொன்னேரி - -பழவேற்காடு பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.பொன்னேரி- - பழவேற்காடு சாலையில், சின்னகாவணம் கிராமம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலத்தின் அருகில் சில நாட்களாக, ஆற்றில் மணல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.இரவு நேரங்களில், ஜே.சி.பி., டிராக்டர்கள் மூலம் மணல்

பொன்னேரி: இரவு நேரங்களில் ஆரணி ஆற்றில் தொடரும் மணல் திருட்டால், பொன்னேரி - -பழவேற்காடு பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
பொன்னேரி- - பழவேற்காடு சாலையில், சின்னகாவணம் கிராமம் அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலத்தின் அருகில் சில நாட்களாக, ஆற்றில் மணல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.இரவு நேரங்களில், ஜே.சி.பி., டிராக்டர்கள் மூலம் மணல் திருடப்படுகிறது.
ஏற்கனவே இப்பகுதியில் தொடர்ந்து மணல் திருடப்பட்டதால், பாலத்தின் கீழ்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த பாறை கற்கள் சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, அங்கு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது மீண்டும், அங்கு மணல் திருட்டு தொடர்வதால், பாலத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. மணல் திருட்டை தடுக்கவும், கண்காணிக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உடனடியாக அங்கு அலுவலர்களை அனுப்பி பார்வையிடவும், இரவுநேரங்களில், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டில்ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X