மந்தைகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு; எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மந்தைகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு; எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் ஆய்வு; தினமலர் செய்தி எதிரொலி

Added : ஆக 09, 2021
Share
போடி : போடி அம்மாபட்டி, மந்தைகுளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் கண்மாய்க்கு சென்று ஆய்வு செய்தார்.போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சியில் மந்தைகுளம் கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் ஊத்தோடை, சில்லமரத்துப்பட்டி சுத்தகங்கை ஓடை வழியாக இக்கண்மாய்க்கு வரும். 500 ஏக்கர்

போடி : போடி அம்மாபட்டி, மந்தைகுளம் கண்மாய் நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் அதிகாரிகளுடன் கண்மாய்க்கு சென்று ஆய்வு செய்தார்.

போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சியில் மந்தைகுளம் கண்மாய் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் ஊத்தோடை, சில்லமரத்துப்பட்டி சுத்தகங்கை ஓடை வழியாக இக்கண்மாய்க்கு வரும். 500 ஏக்கர் நேரடியாகவும், 200 ஏக்கர் மறைமுகமாக பயன்பெறும். சுத்தகங்கை ஓடை, ஊத்தோடை பகுதி யிலிருந்து கண்மாயக்கு வரும் வாய்க்கால் இருபுறமும் தனியார் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர்.

150 அடி அகல ஓடை ஆக்கிரமிப்பால் 60 அடியாக சுருங்கியது. சில்லமரத்துப்பட்டி, அம்மாபட்டி, பெருமாள்கவுண்டன்பட்டிக்கு நீர் வரத்து வருவது குறைந்து வருகிறது. மந்தைகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து தினமலர் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.நடவடிக்கை: தினமலர் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக மந்தை குளம் அமைந்துள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளரும், போடி எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.

ஊராட்சி தலைவர், வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பு விபரங்களை கேட்டார். கண்மாயில் உள்ள முற்புதர், நீர்வரத்துஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் கண்மாய் துார்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X