ஆக்கிரமிப்பின் பிடியில் தேனி பகவதியம்மன் கோயில் தெரு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
தேனி : தேனி பகவதியம்மன் கோயில் தெருவில் ரோட்டில் சிறிய கடைகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளதால் கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகள் காற்றில் பறக்கிறது.தேனியின் முக்கிய பகுதியான பகவதியம்மன் கோயில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த தெருவில் பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்கின்றனர். காலை 8:00 முதல் 11:00 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி

தேனி : தேனி பகவதியம்மன் கோயில் தெருவில் ரோட்டில் சிறிய கடைகள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளதால் கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகள் காற்றில் பறக்கிறது.

தேனியின் முக்கிய பகுதியான பகவதியம்மன் கோயில் தெருவில் 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த தெருவில் பொதுமக்கள் தினமும் அதிகளவில் வந்து செல்கின்றனர். காலை 8:00 முதல் 11:00 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 9:00 மணி வரையும் கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளது. இத் தெருவில் ஒவ்வொரு கடை வாசலிலும் கடைவிரித்திருப்போரிடம் பணம் பெற்று வணிக நிறுவனங்கள் உள்வாடகைக்கு அனுமதித்துள்ளன.

இதனால் அங்கு 64 தெருவோர கடைகள் முளைத்துள்ளன. இந்த ஆக்கிரமிப்பை நகராட்சி கண்டு கொள்வது இல்லை. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் இத்தெருவில் கடைபிடிப்பது இல்லை எனவும், அக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் வலியுறுத்திஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X