பொது செய்தி

தமிழ்நாடு

சாலை அமைப்பதில் அரசு உத்தரவு புறக்கணிப்பு

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'சாலைப் பணிகளின் போது முழுமையாக பெயர்தெடுத்த பின்பே புதிய சாலை அமைக்க வேண்டும்' என அரசு உத்தரவை கண்டுகொள்ளாமல் திண்டுக்கல்லில் சாலைப் பணிகள் நடக்கின்றன.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற சில தினங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு ஓர் அறிவுறுத்தலை உத்தரவாக அனுப்பினார்.அதாவது சாலையை

திண்டுக்கல் : 'சாலைப் பணிகளின் போது முழுமையாக பெயர்தெடுத்த பின்பே புதிய சாலை அமைக்க வேண்டும்' என அரசு உத்தரவை கண்டுகொள்ளாமல் திண்டுக்கல்லில் சாலைப் பணிகள் நடக்கின்றன.

தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற சில தினங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு ஓர் அறிவுறுத்தலை உத்தரவாக அனுப்பினார்.அதாவது சாலையை புதுப்பிக்கும்போது மேற்தள கட்டுமானத்தை பெயர்த்து எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேல்தளம் அமைக்க வேண்டும். மாறாக சாலையை உயர்த்தக்கூடாது. எந்தச் சூழலிலும் சாலை மட்டத்தை அதிகரிக்க கூடாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. திண்டுக்கல் நகர்பகுதியில் அனைத்து சாலைகளும் புதிப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அரசு உத்தரவுப்படி ஏற்கனவே உள்ள சாலையின் மேல்தளம் பெயர்தெடுக்கப்படாமல் அமைக்கின்றனர்.ரோட்டின் புழுதியை மட்டும் அகற்றிவிட்டு ஏற்கனவே உள்ள ரோட்டின் மீது தார் கொட்டி சாலைகளை அமைக்கின்றனர். இதனால் சாலை மட்டம் உயர்ந்து கொண்டே போகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் இதனை முறையாக கண்காணிக்க வேண்டும். இது குறித்து அதிகரிகளிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X