பொது செய்தி

தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம் வீடுதேடி வரும் உதவியாளர்கள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் திண்டுக்கல்லில் முதற்கட்டமாக 41 மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக அம்மையநாயக்கனுார், வடமதுரையில் துவங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் : 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் திண்டுக்கல்லில் முதற்கட்டமாக 41 மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்திட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக அம்மையநாயக்கனுார், வடமதுரையில் துவங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே சென்று 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. புற்றுநோய், காசநோய் உட்பட 10 வகையான நோய் பாதித்தோருக்கு மருத்துவம் வழங்கப்படும். இதற்காக, 41 மருத்துவ உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிரத்யேக வாகனத்தில் வீடு வீடாக சென்று நோய் பரிசோதனை மேற்கொள்வர்.

அவர்களுக்கு 2 மாதத்திற்கான மருந்துகள் வழங்கப்படும். கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கும் மருத்துவ சேவை வழங்க உள்ளனர். டையாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான திரவ பைகளும் வழங்கப்படும். விரைவில் மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X