பொது செய்தி

தமிழ்நாடு

தபால் நிலையத்தில் தங்கப்பத்திரம் விற்பனை

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் தபால் நிலையத்தில் தங்க சேமிப்பு பத்திரம் இன்று (ஆக.9) முதல் ஆக.13 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பத்திரங்கள்அதிக பட்சம் 8 ஆண்டுகளுக்கு பின் முதிர்வடையும். பணமாக மாற்ற விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு பின் அன்றயை மார்க்கெட் நிலவரப்படி தொகையைப் பெற்று கொள்ளலாம். தங்கப் பத்திரம் முதலீட்டிற்கு 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு முதலீட்டாளர்களின் வங்கி

திண்டுக்கல் : திண்டுக்கல் தபால் நிலையத்தில் தங்க சேமிப்பு பத்திரம் இன்று (ஆக.9) முதல் ஆக.13 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பத்திரங்கள்அதிக பட்சம் 8 ஆண்டுகளுக்கு பின் முதிர்வடையும். பணமாக மாற்ற விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு பின் அன்றயை மார்க்கெட் நிலவரப்படி தொகையைப் பெற்று கொள்ளலாம்.

தங்கப் பத்திரம் முதலீட்டிற்கு 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஒரு கிராம் தங்க பத்திரம் ரூ.4ஆயிரத்து 790. ஒரு நபர் அதிகபட்சம் 4 கிலோ வரைமுதலீடு செய்யலாம்.முதலீட்டாளர்களுக்கு அவசர தேவை ஏற்பட்டால் தங்கப் பத்திரத்தை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்ளலாம்.

தங்கப்பத்திரம் வாங்குவதற்கு வாக்காளர், ஆதார், பான் கார்டு மட்டுமே அடையாள சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி., கோடு அவசியம். வாரிசு நியமனத்திற்கு வாரிசுதாரரின் வயது, வங்கி கணக்கு எண், அடையாள அட்டை சான்று தேவை. இன்று முதல் ஆக.13 வரை தங்கப் பத்திரம் விற்பனை நடக்க உள்ளது என, முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் சகாயராஜூ தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X