விவசாயிகள் சான்றுபெற  சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் சான்றுபெற  சிறப்பு முகாம்

Added : ஆக 09, 2021
Share
எரியோடு : விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற தேவையான சான்றுகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.ஆகஸ்ட் 11 ம் தேதி வடமதுரை, எரியோடு வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், ஆக.12ல் அய்யலுார், வேடசந்துார் அலுவலங்களிலும் முகாம் நடக்கிறது. நுண்ணீர் பாசன திட்டத்துக்காக விவசாயிகள் இணையதளத்தில் தங்களின் நில உடமை ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.இதற்காக

எரியோடு : விவசாயிகள் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற தேவையான சான்றுகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

ஆகஸ்ட் 11 ம் தேதி வடமதுரை, எரியோடு வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும், ஆக.12ல் அய்யலுார், வேடசந்துார் அலுவலங்களிலும் முகாம் நடக்கிறது. நுண்ணீர் பாசன திட்டத்துக்காக விவசாயிகள் இணையதளத்தில் தங்களின் நில உடமை ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும்.இதற்காக விவசாயிகளுக்குத் தேவையான சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் பெற வருவாய், வேளாண், தோட்டக்கலை துறையினர் இணைந்து இந்த சிறப்பு முகாம்களை நடத்துகின்றனர். இதற்காக, விவசாயிகள் இ-சேவை மையங்களில் முன்பதிவு செய்ய வேண்டும். முகாம் நாளில் சான்றிதழ் வழங்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X