சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் போலீசிடம் தப்பிக்க ரயிலில் இருந்து குதித்தவர் பலி

Added : ஆக 09, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : மதுரை வாடிப்பட்டி அருகே குட்கா கடத்தியவர் போலீசிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து பலியானார். 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சிக்கந்தர் அராபத் 31. சேம்பர் தொழில் செய்தார். இதே பகுதி ஜக்காரியா 48, அகமது சிராஜூதின் 36, ஜெயின் அலாவுதீன் 42, மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். ஊரடங்கால் ஊரில்

வாடிப்பட்டி : மதுரை வாடிப்பட்டி அருகே குட்கா கடத்தியவர் போலீசிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்து பலியானார். 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சிக்கந்தர் அராபத் 31. சேம்பர் தொழில் செய்தார். இதே பகுதி ஜக்காரியா 48, அகமது சிராஜூதின் 36, ஜெயின் அலாவுதீன் 42, மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். ஊரடங்கால் ஊரில் இருந்த இவர்கள் பெங்களூருவிலிருந்து 100 கிலோ குட்காவை ரயிலில் கடத்தி வந்தனர்.நேற்று காலை வாடிப்பட்டி அருகே வந்தபோது சோழவந்தான் ஸ்டேஷனில் இறங்க தயாராக நின்றனர். இவர்களது பைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தபோது மற்றொரு படிக்கட்டில் நின்ற சிக்கந்தர் தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்து இறந்தார். 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் மூவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X